Published : 07 Mar 2014 11:55 AM
Last Updated : 07 Mar 2014 11:55 AM
யுபிஎஸ் உற்பத்தியில் முன்னணி யில் உள்ள பிரான்ஸைச் சேர்ந்த சோகோமெக் நிறுவனத்தின் குர்காவ்ன் ஆலையில் உற்பத்தி தொடங்கியுள்ளது. இந்த ஆலையிலிருந்து முதலாவது யுபிஎஸ் டெல்பிஸ் எம்பி எலைட் வெளிவந்துள்ளது.
சோகோமெக் நிறுவனம் இந்தியாவில் இது வரை ரூ. 26 கோடி முதலீடு செய்துள்ளது. மின்சாரம் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கும் இந்நிறுவனம் கட்டமைப்பு, மரபு சாரா எரிசக்தி உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறுவனத்தின் வருமானம் ரூ. 400 கோடியை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
குர்காவ்னில் 5,200 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட ஆலை உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. இங்கு ஆண்டுக்கு 500 யுபிஎஸ்கள் உற்பத்தி செய்யப்படும். இந்த ஆலையில் பவர் கன்ட்ரோல் மற்றும் பாதுகாப்பு கருவிகளும் தயாரிக்கப்படுகின்றன. யுபிஎஸ் விற்பனையில் 34 சதவீதம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஐடிஇஎஸ் துறையினரது ஆகும்.
இந்த சந்தையைக் கைப்பற்ற சோகோமெக் திட்டமிட் டுள்ளது. 80 கேவிஏ முதல் 200 கேவிஏ திறன் கொண்ட யுபிஎஸ்களைத் தயாரிக்கும் திறன் கொண்டதாக இப்புதிய ஆலை விளங்குகிறது.உலகெங்கிலும் உள்ள இந்நிறு வனத்தின் 9 ஆலைகளில் 3,200 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT