Published : 21 Jun 2017 10:44 AM
Last Updated : 21 Jun 2017 10:44 AM
சர்வதேச அளவில் போர் விமானங் கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் இந்தியாவில் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற் காக டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் திங்கள்கிழமை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. டாடா நிறுவனத்துடன் இணைந்து எப் 16 போர் விமானங்களை தயாரிக்க உள்ளது. இந்திய ராணுவத்துக்கான போர் விமானங்கள் தயாரிக்க நூறு கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் பெற்றுள்ளதால் இந்தியாவில் ஆலை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனம் டெக்ஸாஸில் உள்ள ஆலையை இந்தியாவில் அமைப்பதன் மூலம் பல கோடி டாலர் மதிப்பிலான இந்திய ராணுவ ஒப்பந்தத்தை பெற முடியும் என நம்புகிறது.
இந்திய விமான படைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட புதிய ரக விமானங்களை வாங்க அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே ரஷ்யாவிலிருந்து வாங்கப்பட்ட விமானங்களுக்கு மாற்றாக புதிய விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்திய விமானப் படைக்கு ஆயுதத் தளவாடங்களை அளிக்கும் நிறுவனங்கள் இந்தியா தயாரிப்பாளர்களுடன் கூட்டு வைத்து இந்தியாவில் உற்பத்தி ஆலை அமைத்து தயாரிக்க வேண்டும் என்கிற நிபந்தனையை மோடி அரசு ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் முழு அளவிலான இறக்குமதிக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்துக்கு சுமார் 100 முதல் 250 விமானங்கள் வரை லாக்ஹீட் நிறுவனம் அளிக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.
இது குறித்து பேசிய லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் எப் 16 விமானப் பிரிவின் தலைவர் பில் ஹோவர்டு கூறுகையில், இந்திய விமான படைக்குத் தேவையான எப் 16 ரக விமானங்களை தயாரிப்ப தற்கான ஆலையை இந்தியாவி லேயே தொடங்க உள்ளோம். இந்தியாவில் செயல்படுவதற்கு `மேக் இன் இந்தியா’ திட்டத் துக்கு ஏற்ப டாடா நிறுவனத்து டன் இந்த ஒப்பந்தம் மேற்கொண்டுள் ளோம் என்றார். பாரீஸில் நடை பெற்றுவரும் விமானக் கண்காட்சியில் கலந்து கொண்டவர் இதைக் கூறினார்.
ஆனால் இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் அமெரிக்க நிறுவனங்களுக்கு கூடுதல் சுமை யாக இருக்கும் என்பது குறிப் பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் புதிய கொள்கைகள்படி அமெரிக்காவுக்கு வெளியே ஆலை அமைக்க திட்டமிடும் நிறுவனங்கள் அதற்கு பதிலாக அமெரிக்காவிலேயே முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் லாக்ஹீட் நிறுவனம் அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்து தங்களது தொழில் திட்டங்களை விளக்கியுள்ளது. ட்ரம்ப் தலைமையிலான அரசு எங்களுக்கு முழு ஆதரவு அளித்துள்ளது என்று ஹோவர்டு கூறினார்.
இதுதவிர இந்திய விமானப் படைக்கு ஸ்வீடனை சேர்ந்த சாப் நிறுவனமும் போர் விமானங்களை தயாரித்து தர ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்த நிறுவனம் இந்தியாவில் எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது என்பதை அறிவிக்கவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 26-ம் தேதி அமெரிக்கா சென்று அதிபர் டொனால்ட் ட்ரம்பை முதன் முதலாக சந்தித்து பேச உள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் லாக்ஹீட் நிறுவனம் இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. சமீப காலமாக ராணுவ ரீதியில் அமெரிக்கா, இந்தியா இடையே நட்பு வலுப்பெற்று வருகிறது. ரஷ்யா மற்றும் இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் ராணுவ தளவாடங்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியா வாங்குவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT