Last Updated : 08 Feb, 2014 10:57 AM

1  

Published : 08 Feb 2014 10:57 AM
Last Updated : 08 Feb 2014 10:57 AM

மேலாண்மை பாணி - II - என்றால் என்ன ?

Theory Z

அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில் உள்ள வியாபார மேலாண்மை பாணிகளை ஆராய்ந்து William Ouchi உருவாக்கிய கோட்பாடு Theory Y. ஒரு நிறுவனத்தில் எல்லா நிலைகளில் உள்ள தொழிலாளர்களையும் இணைப்பதுதான் சிறந்த மேலாண்மை பாணி என்று இவர் கூறுகிறார்.

இந்த கோட்பாட்டின் சிறப்பு தன்மைகள் ஒவ்வொருவரும் நிறுவனத்தில் நீண்ட நாள்கள் வேலை செய்யும் வாய்ப்பும், தொடர்ந்து நிறுவன அமைப்பில் மேல்நோக்கி செல்ல வாய்ப்புகள் ஏற்படுத்துவதும், முறையான கட்டுப்பாடுகள் இல்லாமலும், தனி நபருக்கு முக்கியத்துவம் அளித்தும் கூட்டாக முடிவு எடுக்கும் முறை ஆகியன.

நிறுவன அமைப்பில் கீழிருந்து மேலே உள்ள அனைவரையும் திருப்திபடுத்துவதை இந்த கோட்பாடு வலியுறுத்துகிறது. தொழிலாளர் நலனை காப்பதன் மூலம் கீழ்நிலையில் உள்ளவர்களை இந்த மேலாண்மை பாணி திருப்திபடுத்தமுடியும்.

நிறுவன அமைப்பில் எல்லாரும் முடிவெடுப்பதில் பங்குபெறுவதால், எல்லாரையும் திருப்தி செய்கிற, மேல் தட்டு மேலாளர்களையும் திருப்தி செய்கிற முடிவுகள் கிடைக்கின்றன. தொழிலாளர்களின் குடும்ப நலன் கூட இந்த மேலாண்மை பாணியில் முக்கியம்.

Total Quality Management (TQM)

தரமான பொருட்களை தயாரிக்கும் நோக்கோடு உருவாக்கப்பட்டது TQM. நுகர்வோர் திருப்தி, தரமான பொருள் தயாரிப்பது எல்லா தொழிலாளர்களின் பொறுப்பு, கூட்டு முயற்சி ஆகியவை இந்த கோட்பாட்டின் சிறப்பு அம்சங்கள்.

தலைமை அலுவலர் தொடங்கி கடைநிலை ஊழியர்வரை எல்லாரும் தரத்தை உறுதிசெய்வதில் பங்குபெறவேண்டும். Participative Management போல இதிலும் நிறுவனத்தின் எல்லா நிலை தொழிலாளர்களும் தரத்தை மேம்படுத்துவதில் பங்கு கொள்ள வேண்டும். தரத்தை மையமாக வைத்து மேலாண்மை செய்யும்போது வியாபார மாற்றத்திற்கேற்ப உற்பத்தியிலும் தொடர் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது.

Management by Walking Around (MWA)

மேலாளர் ஒரு நிறுவனத்தில் உள்ள எல்லா தொழிலாளர்களிடமும் தானே முன்வந்து பேசி அவர்களின் கருத்துக்களை அறிந்து நிறுவனத்தை நடுத்துவது MWA என்ற மேலாண்மை பாணி. எல்லா தொழிலாளர்களிடமும் அவ்வப்போது பேசி, பிரச்சனைகளை அவ்வப்போது தீர்ப்பதால், பெரிய பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.

தொழிலாளர்களிடையே நேரடியாக பேசுவதால், உண்மை நிலை உடனுக்குடன் மேலாளருக்கு தெரியவந்து பிரச்சனைகளை தீர்க்க உதவும். இதில் தொழிலாளர்களை இணைத்தே முடிவுகள் எடுப்பதால், முடிவுகளை எளிதில் உடனடியாக செயல்படுத்தமுடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x