Last Updated : 01 Mar, 2014 11:58 AM

 

Published : 01 Mar 2014 11:58 AM
Last Updated : 01 Mar 2014 11:58 AM

தவறான தேர்வு (adverse selection) - என்றால் என்ன?

காப்பீட்டுத் துறையில், இந்த தவறான தேர்வு (adverse selection) ஏற்படுவது உண்டு. ஆயுள் அல்லது மருத்துவக் காப்பீடு நீங்கள் எடுப்பதாக வைத்துக்கொள்வோம். உங்கள் உடல் நலம் பற்றிய முழுவிபரம் தெரிந்தவர் நீங்கள் மட்டுமே. சராசரி மனிதர்களைவிட அதிக சுகாதார பிரச்சினைகள் உள்ளவர் நீங்கள் என்றால் அதனை மறைத்து உடனடியாக ஆயுள் அல்லது மருத்துவக் காப்பீடு எடுப்பீர்கள்.

உங்களுக்கு சராசரி மனிதனைவிட அதிக ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தோன்றினால் நீங்கள் உடனடியாக ஆயுள் அல்லது மருத்துவக் காப்பீடு எடுப்பதைத் தவிர்த்து விடுவீர்கள். இவ்வாறு எல்லாரும் செய்யும்போது, காப்பீடு நிறுவனத்தில் அதிக உடல்நலம் குன்றியவர்கள் மட்டுமே காப்பீடு எடுப்பார்கள்.

ஆனால் உண்மையில் நல்ல உடல் நலம் உள்ளவர்கள், உடல் நலம் குன்றியவர்கள் என்ற இரு குழுக்களும் காப்பீடு திட்டத்தில் சேர்ந்தால் மட்டுமே காப்பீடு நிறுவனம், riskகை எல்லாருக்கும் பகிர்ந்தளித்து ஓரளவிற்கு லாபத்துடனும் வியாபாரத்தை நடத்த முடியும். உடல் நலம் குன்றியவர்கள் மட்டுமே காப்பீடு எடுப்பது தவறான தேர்வு எனப்படும்.

இதனைத் தவிர்க்க காப்பீடு நிறுவனம், மருத்துவ பரிசோதனை, அதிக பிரீமியம் தொகை என்ற வகையில் செலவுகளை அதிகப்படுத்தவேண்டியுள்ளது.

ஒழுக்கக் கேடு (moral hazard)

இருவரிடையே ஒரு வியாபார ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பிறகு, ஒருவர் மற்றவருக்கு நஷ்டத்தையும் தனக்கு லாபத்தையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஒழுக்கக் கேடு (moral hazard) என்பர்.

ஒரு தீ விபத்து காப்பீடு இருப்பதாலேயே நான் அலட்சியமாக இருப்பது ஒருவித moral hazard. அல்லது தீ விபத்து நடந்த பிறகு நஷ்டத்தை அதிகப்படுத்தி காட்டுவதும் moral hazard தான். இவ்வாறன நடவடிக்கைகளை வியாபார ஒப்பந்தத்தில் கொண்டுவருவது சிரமம். எனவே, moral hazardஇல் இருந்து தப்புவதற்காக மிக குழப்பமான சட்டச் சிக்கலை ஏற்படுத்தக் கூடிய வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படுத்துவதும், அதனால் வியாபார செலவுகள் அதிகமாவதும் உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x