Published : 28 Feb 2014 10:35 AM
Last Updated : 28 Feb 2014 10:35 AM

சவால்களை வாய்ப்புகளாக மாற்ற வேண்டும்: நரேந்திர மோடி

வர்த்தகர்கள் புதிய தொழில் நுட்பம் மூலம் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தெரிவித்திருக்கிறார்.

ஆன்லைனுக்கு மாறிக் கொள்வதன் மூலம் வருவாய் துறை அதிகாரிகள், உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் மையும் இல்லாமல் போகும் என்று அவர் தெரிவித்தார். மேலும் சவால்களை வாய்ப்புகளாக மாற்ற கற்றுக் கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பங்களைக் கண்டு பயப்படத் தேவை இல்லை. தொழில்நுட்பம் நம்முடைய அமைப்பை மேம்படுத்தும்.

புதிய தொழில்நுட்பம் மூலம் உங்களுடைய பொருட்களை பலருக்கும் எடுத்துச்செல்ல முடியும். இப்போது சிறிய நகரங்களில் இருக்கும் மக்கள் கூட பிராண்டட் பொருட்களை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்றார் மோடி. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் உங்களை வளர்த்துக்கொள்ள இதைக் கற்றுக்கொள்ளுங்கள். தொழில் நுட்பத்தைப் பார்த்து பயந்து வெளியேற வேண்டாம் என்று அனைந்திந்திய வர்த்தக கூட்டமைப்பில் மோடி தெரிவித்தார்.

நம்முடைய குழந்தைகள் உலகம் முழுக்க தொழில்நுட்பத்துறையில் பணிபுரிந்துவருகிறார்கள். நம்முடைய வியாபர விரிவாக் கத்துக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்வோம்.

வர்த்தகர்களுக்கான கட்சி என்ற இமேஜ் பி.ஜே.பி. மீது இருக்கிறது என்றவர், ரிஸ்க் எடுக்காமல் தொழில் முனைவோர்களாக உருவாக முடியாது என்ற தொழில் முனைவோர்களை புகழ்ந்தவர், உங்கள் (வர்த்தகர்கள்) கருத்து களை எங்களது தேர்தல் அறிக்கை யில் சேர்க்கிறோம் என்றார்.

நம்பிக்கை குறித்து பேச ஆரம்பித்த மோடி மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே நம்பிக்கையில் பெரிய பிளவு, நம்பிக்கையின்மை இருக்கிறது. வரி அலுவலர்களின் பார்வையில் வர்த்தகர்கள் என்றால் திருடர்கள் என்பது போல கண்ணோட்டம்தான் இருக்கிறது. அதுபோல பார்வை இருக்க கூடாது என்றார்.

ஒருவரின் மீது ஒருவர் நம்பிக்கை வைக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் வழிமுறைகள் இருக்கிறது. ஒருவேளை எதாவது முறைகேடுகள் நடந்தால் சட்டத்தின் மூலம்தான் அதைச் சரிசெய்ய வேண்டும். இந்த கூட்டத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை விமர்சிக்க அவர் தவறவில்லை. நமது வெளிவிவகாரத்துறை அமைச்சகம் இன்னும் பழைய வழிமுறை களையே பின்பற்றி வருகிறது. அந்த சகாப்தம் முடிந்துவிட்டது, டெல்லி அதை நிறுத்தவேண்டும்.

மேலும், ஒவ்வொரு மாநிலங்களை அங்கீகரிப்பது முக்கியம். நாட்டின் உற்பத்தி துறையை கவனிக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். வர்த்தகர்களின் வருமானம் அதிகரிக்கும். உற்பத்தித்துறையை ஊக்குவிக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உற்பத்தித் துறை தொடர்விளைவுகளை உருவாக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x