Published : 11 Jan 2014 12:00 AM
Last Updated : 11 Jan 2014 12:00 AM

நசிகேத் மோர் - இவரைத் தெரியுமா?

#மகாராஷ்ட்ர மாநிலத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். ஐ.ஐ.எம். ஆமதாபாத்திலும், வார்டன் ஸ்கூலில் டாக்டர் பட்டமும் பெற்றவர்.

#ரிசர்வ் வங்கியின் தற்போதைய கவர்னர் ரகுராம் ராஜனும் இவரும் ஐ.ஐ.எம்.-யில் ஒன்றாக படித்தவர்கள்.

#1987-ம் ஆண்டு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் பணியில் சேர்ந்தார். 2007-ம் ஆண்டு வரைக்கும் பணியில் இருந்தார். அதன் பிறகு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் அறக்கட்டளையை துவங்கினார்.

#2011-ம் ஆண்டு ஷேத்ரிய கிராமிய நிதி சேவை (Kshetriya Gramin Financial Services) என்ற மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனத்தை துவங்கினார்.

#ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் பல பொறுப்புகளை கவனித்தவர். வங்கியின் இயக்குநர் குழுவிலும் செயல் இயக்குநராகவும் இருந்தவர்.

#கேர் இந்தியா, கிரிசில், ரிசர்வ் வங்கி உள்ளிட்டவற்றின் இயக்குநர் குழுவில் இருப்பவர். இதற்கு முன்பு விப்ரோ, செபி, என்.எஸ்.இ. உள்ளிட்ட அமைப்புகளில் பல குழுக்களில் இருந்தவர்.

#அனைவருக்கும் வங்கி சேவை அளிக்கும் தொலைநோக்கு திட்டத்தின் கமிட்டியின் தலைவர். மேலும் புதிய வங்கி தொடங்க தனியார் நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்க ரிசர்வ் வங்கி அமைத்த குழுவின் உறுப்பினர் என பல பொறுப்புகளைக் கையாளுபவர்.

#49 வயதே ஆன இவர், வருங்காலத்தில் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x