Published : 19 Aug 2016 10:27 AM
Last Updated : 19 Aug 2016 10:27 AM
புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும் தொழில்துறைத் திட்டங்களை செயல்படுத்தவும் சீன அரசு 3,000 கோடி டாலர் தொகையில் ஒரு நிதியத்தை உருவாக்கியுள்ளது.
துணிகர முதலீடு எனப் படும் வென்ச்சர் கேபிடல் அடிப்படையில் இந்த நிதியம் பயன்படுத்தப்படும்.
புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மதிப்பு கூட்டு நடவடிக்கைகளை தொழில் நிறு வனங்கள் மேற்கொள்வதை சீன அரசு ஊக்குவிக்கிறது. சர்வதேச அளவில் போட்டியிடும் அளவுக்கு உயர்வதற்காக கடுமையான தரக் கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்கவும் சீன அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி தொழில்நுட்பத்தில் நவீனமயமாக்க முற்படும் நிறுவனங்களுக்கு மட்டும் இந்த நிதியிலிருந்து அளிக்கப்படும். அதேசமயம் போட்டியிட இயலாத தகுதியற்ற நிறுவனங்களை புறக்கணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான நிதியை சீனா ரிஃபார்ம் ஹோல்டிங் கார்ப்பரே ஷன் லிமிடெட் நிறுவனம், சீன தபால் சேமிப்பு வங்கி, சீனா கட்டுமான வங்கி மற்றும் ஷென்சென் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங் நிறுவனங்கள் அளிக்கின்றன. இதில் அதிகபட்ச பங்கை சீன ரிஃபார்ம் ஹோல்டிங் நிறுவனம் வைத்திருக்கும். தேசிய உத்திகளின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT