Last Updated : 13 Oct, 2014 12:06 PM

 

Published : 13 Oct 2014 12:06 PM
Last Updated : 13 Oct 2014 12:06 PM

இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு 302 கோடி டாலர்

கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் மேற்கொண்ட நேரடி முதலீடு 302 கோடி டாலராகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீட்டைக் காட்டிலும் இது இரு மடங்கு அதிகம் என ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் மேற்கொண்ட முதலீடு 143 கோடி டாலராகும்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனங்களின் முதலீடு 125 கோடி டாலராகும். டாடா ஸ்டீல், கேபிசி இண்டர் நேஷனல், கிளென்மார்க் பார்ம சூடிகல்ஸ், விடியோகான் இண்டஸ்ட்ரீஸ், மெர்காடெர் ஆகிய நிறுவனங்கள் பெரு மளவில் முதலீடு செய்த நிறுவ னங்களாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x