Last Updated : 25 Oct, 2014 03:02 PM

 

Published : 25 Oct 2014 03:02 PM
Last Updated : 25 Oct 2014 03:02 PM

காக்னிசன்ட் நிறுவனத்துக்கு ஜெர்மன் நிறுவன ஆர்டர்

தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணியில் திகழும் காக்னிசன்ட் டெக்னாலஜீஸ் சொல்யூஷன்ஸ் (சிடிஎஸ்) நிறுவனத்துக்கு ஜெர்மனியைச் சேர்ந்த வோர்வெர்க் குழும நிறுவனத்திடமிருந்து ஆர்டர் கிடைத்துள்ளது.

320 கோடி டாலர் வருமானம் ஈட்டும் இக்குழும நிறுவனத்துக்கு தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகள் மற்றும் அது சார்ந்த வசதிகளை ஆறு ஆண்டுகளுக்கு ஏற்படுத்தித் தரும் பணியை காக்னிசன்ட் மேற்கொள்ளும்.

நேரடி விற்பனையில் ஈடுபட்டுள்ள வோர்வெர்க் குழுமத்துக்கு 24 நாடுகளில் துணை நிறுவனங்கள் உள்ளன. காக்னிசன்ட் நிறுவனத்துக்கு அளித் துள்ள ஒப்பந்தம் மூலம் தகவல் தொழில்நுட்ப பணிளை இந்நிறுவனம் ஓரிடத்திலிருந்து மையப்படுத்தி செயல்படுத்த முடியும்.

காக்னிசன்ட் நிறுவனம் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், தகவல் மையம் ஏற்படுத் துதல், நெட்வொர்க் மற்றும் அதை நிர்வகிப்பது உள்ளிட்ட பணிகளை 6 ஆண்டுகளுக்கு செய்து தரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x