Published : 11 Oct 2014 12:01 PM
Last Updated : 11 Oct 2014 12:01 PM
அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ஜன்தன் திட்டத்தின் மூலம் இதுவரை 5.52 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ. 4,268 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. இத்தகவலை பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின உரை நிகழ்த்தும்போது அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்கச் செய்யும் ஜன்தன் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அறிவித்தார். இதன்படி ஆகஸ்ட் 28-ம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டது. பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா எனப்படும் பிஎம்ஜேடிஒய் திட்டத்தில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளவர்களுக்கு ரூ. 5,000 ஓவர் டிராப்ட் வசதி வங்கிகளிலும் கிடைக்கும்.
ஆதார் அட்டை அடிப்படையில் தொடங்கப்படும் இந்தக் கணக்குகளுக்கு `ரூ பே’ டெபிட் கார்டும் ரூ. 1 லட்சத்துக்கான விபத்து காப்பீடும் வழங்கப்படும். இது தவிர, வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரூ. 30 ஆயிரத்துக்கு ஆயுள் காப்பீடும் வழங்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT