Published : 11 Jan 2014 10:50 AM
Last Updated : 11 Jan 2014 10:50 AM

இன்ஃபோசிஸ் லாபம் 21% உயர்வு - நிறுவனத்திலிருந்து வெளியேறியவர்களுக்கு மூர்த்தி வாழ்த்து

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான இன்ஃபோசிஸ்ஸின் மூன்றாம் காலாண்டு லாபம் 21 சதவீதம் அதிகரித்துள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையான மூன்றாம் காலாண்டில் இந்நிறுவனம் ரூ. 2,875 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது.

இந்நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருமானம் மூன்றாம் காலாண்டில் 25 சதவீதம் அதிகரித்து ரூ. 13,026 கோடியாக உயர்ந்ததாக மும்பை பங்குச்சந்தைக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நிதிநிலை அறிக்கையின்படி (ஐஎப்ஆர்எஸ்) நிறுவன வருமானம் 6.7 சதவீதம் அதிகரித்து 463 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த வருமானம் 1.7 சதவீதம் அதிகரித்து 210 கோடி டாலராக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனம் மீண்டும் இரட்டை இலக்கத்தில் லாபம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. நிறுவனர் என்.ஆர். நாராயணமூர்த்தி மீண்டும் நிறுவனத்துக்குத் திரும்பியதில் இரட்டை இலக்கத்தில் லாபம் ஈட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதி ஓய்வு பெற்ற நாராயணமூர்த்தி, மீண்டும் பணிக்குத் திரும்பியவுடன் ஜூலை மாதத்தில் வளர்ச்சி நிலை 9 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை என நிர்ணயிக்கப்பட்டது. முன்னர் இந்த இலக்கு 6 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

வரும் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப சேவைத் துறைக்கு வளமான நாள்கள் காத்திருப்பதாகவும், பொருளாதார நிலை மீட்சியடைவதால், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்களது முதலீடுகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எஸ்.டி. சிபுலால் தெரிவித்தார்.

நிறுவனத்துக்கு கடந்த மூன்றாம் காலாண்டில் 54 புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளதாகவும் இதனால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 888 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிதாக 6,682 தொழில்நுட்ப வல்லுநர்கள் நிறுவனத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மூன்றாம் காலாண்டில் வெளியேறியவர்கள் எண்ணிக்கை 8,505 ஆகும். துணை நிறுவனங்களையும் சேர்த்து வெளியேறியோர் விகிதம் 18.1%.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 1,58,404 ஆகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் 1,60,227 பேர் இருந்தனர். இதில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்களின் எண்ணிக்கை 1,48,740 ஆகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள

நிறுவனத்தின் அலுவலகங்களில் பணியாற்ற அங்குள்ள கல்லூரிகளிலிருந்து மாணவர்களைத் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் சிபுலால் தெரிவித்தார்.

வெளியேறியவர்களுக்கு வாழ்த்து

கடந்த ஒரு வருடத்தில் எட்டுக்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் வெளியேறி இருக்கிறார்கள். இது பற்றி செய்தியாளர்களிடம் கேட்டபோது, வெளியேறியவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் நிறுவனத்தில் பல தலைவர்கள் இருக்கிறார்கள். அதனால் நிறுவனத்தின் எதிர்காலத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. மேலும் நிறுவனத்தின் தரத்திலும் எந்தவிதமான சமரசமும் கிடையாது என்று தெரிவித்தார்.

ரோஹன் மூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை ொறுப்புக்கு தயார் செய்யப்படுகிறாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஹார்வேர்டிலிருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு இங்கே வந்திருக்கிறார். சரியான நேரத்தில் அங்கு செல்வார். மேலும் இன்ஃபோசிஸில் எந்த பொறுப்புக்கு வருவார் என்பதை நான் முடிவு செய்ய முடியாது.

அவர் (ரோஹன்) தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு இந்தியாவில் ஏதாவது செய்யலாம். எதிர்காலத்தில் அவர் என்ன செய்வார் என்பதை என்னால் சொல்ல முடியாது. அது சரியாகவும் இருக்காது என்றார். தலைமைக்கான நிறுவனத்தை அமைத்த முதல் கார்ப்பரேட் இன்ஃபோசிஸ்தான். இதன் மூலம் 600க்கும் தலைவர்களை உருவாக்கி இருக்கிறோம். அதனால் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் எதிர்கால தலைமை பற்றிய கவலை இல்லை.

பங்குவிலை உயர்வு

நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் நன்றாக வந்திருப்பதை அடுத்து, இன்ஃ

போசிஸ் பங்குகள் இன்று மூன்று சதவீத அளவுக்கு உயர்ந்தன. வர்த்தகத்தின் முடிவில் 100 ரூபாய் உயர்ந்து 3551.25 ரூபாயில் வர்த்தகம் முடிந்தது.பி.எஸ்.இ. ஐ.டி. குறியீடும் 2 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x