Published : 01 May 2014 09:53 AM
Last Updated : 01 May 2014 09:53 AM
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது தொடர் நடவடிக்கை, அதில் நாம் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது என்று திட்டக் கமிஷன் தலைவரும், பிரதமருமான மன்மோகன் சிங் தெரிவித்தார்.
திட்டக் கமிஷன் குழுவின் கூட்டம் டெல்லியில் புதன்கிழமை அதன் தலைவரான மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. கடந்த 10 ஆண்டுகளாக திட்டக் கமிஷனுக்கு தலைவராக இருந்து வரும் மன்மோகன் சிங் பங்கேற் கும் கடைசி கூட்டம் இதுவாகும்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து முன்னேற்றப் பாதையை நோக்கி சென்று கொண் டிருக்கிறது. இதில் இன்னமும் நிறைவேற்ற வேண்டிய பணிகள் அதிகம் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
தாரளமயமாக்கப்பட்ட பொரு ளாதார சூழலில் சந்தைப் பொருளா தாரத்தை நம்பியே வளர்ச்சி உள்ளது. இந்த விஷயத்தில் திட்டக் கமிஷன் செயல்படுத்த வேண்டிய பணிகள் அதிகம் உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் திட்டக் கமிஷனின் செயல்பாடு மிகவும் திருப்திகரமாகவே இருந்தது என்று குறிப்பிட்ட பிரதமர், இனி வரும் காலங்களில் முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மாறிவரும் பொருளாதார சூழ்நிலையை மதிப்பீடு செய்து அதில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதற்கு திட்டக் கமிஷன் தயாராக வேண்டும் என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.
பல்வேறு காலகட்டங்களுக் கேற்ப மதிப்பீடு செய்வற்கு பல் வேறு வழிமுறைகளை நாம் இன்னமும் பின்பற்றி வருகிறோமா? இதில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா? எந்தெந்த பிரி வில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று ஆராய வேண்டும். வழக்க மான முறையில் அல்லாமல் மாறு தலுக்கேற்ப திட்டக் கமிஷனின் செயல்பாடு மாற வேண்டும் என்று குறிப்பிட்ட மன்மோகன் சிங், இது தொடர்பான சில பிரச்சினை களையும் கோடிட்டுக் காட்டினார்.
1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை மத்திய நிதி அமைச்ச ராக தான் இருந்தபோது மத்திய திட்டக் கமிஷன் துணைத்தலைவ ராக இருந்த பிரணாப் முகர்ஜி மிகப் பெரும் ஒத்துழைப்பை அளித்தார் என்றும் சிங் குறிப்பிட்டார்.
அந்த கால கட்டத்தில்தான் மிகப் பெரிய பொருளாதார கொள்கை மாற்றம் மேற்கொள்ள வேண்டி யிருந்தது. அப்போது பிரணாப் முகர்ஜி மிகச் சிறப்பாக செயல்பட்டு திட்டக் கமிஷனின் செயல்பாட்டை திறம்பட நடத்தினார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கடந்த 10 ஆண்டுக் கால ஆட்சியில் திட்டக் கமிஷன் புதிய வளர்ச்சிப் பாதைக்கான வழி முறைகளைக் கண்டறிந்ததோடு அனைத்து உறுப்பினர்களது ஒத் துழைப்போடு ஒருங்கிணைந்து செயல்பட்டது.
மத்திய அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு விவா தங்களுக்கு உள்ளான போதிலும் திட்டக்குழுவின் செயல்பாடு பாரட்டத்தக்கது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை திறம்படச் செயல் படுத்தியதில் திட்டக்குழுவின் பங் களிப்பு அளப்பரியது என்று குறிப் பிட்ட சிங், இதன் செயல்பாட்டை மேலும் செழுமைப்படுத்த வேண்டி யது அவசியம் என்றார்.
புதிய சிந்தனைகளை செயலாக் கம் செய்ததோடு பல்வேறு அமைச் சகங்களுக்கிடையே நிலவிய கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒத்துழைப்பை ஏற்படுத் தியது மற்றும் மத்திய அரசு மற்றும் தனியார் பங்களிப்போடு கட்டமைப்பு திட்டங்களைச் செயல்படுத்தியது ஆகியன திட்டக் கமிஷன் செயல்பாடுகளில் மிகவும் குறிப்பிடத்தக்கவை என்று மன்மோகன் சிங் கூறினார்.
‘புதிய அரசின் கொள்கைகளை பொறுத்தே வளர்ச்சி'
கூடிய விரைவில் அமைய விருக்கும் புதிய அரசின் கொள்கைகளை பொறுத்தே பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.
நடப்பு நிதி ஆண்டின் வளர்ச்சி நன்றாக இருக்கும் இருந்தாலும், புதிய அரசின் கொள்கைகள் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்று திட்டக்கமிஷன் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.
12-வது ஐந்தாண்டு திட்டத்தின் வளர்ச்சி பற்றிய மறுமதிப்பீட்டை புதிதாக வரும் திட்டக்கமிஷன் முடிவெடுக்கும் என்றார். தற்போதைய நிலையில் 12 வது ஐந்தாண்டு (2012-17) திட்டத்தில் 8 சதவீத சராசரி வளர்ச்சி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் முதல் இரண்டு ஆண்டுகளில் 5 சதவீதத்துக்கும் கீழே வளர்ச்சி இருந்ததால் இந்த இலக்கை எட்டுவது சிரமம் என்று நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இலக்கை மறுமதிப்பீடு செய்யும் வேலையை இந்த தற்போதைய கமிஷன் செய்துவருகிறது. இருந்தாலும் புதிய திட்டக்கமிஷன் இந்த வேலையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என்றார். தற்போதை அரசு முடியும் போதே திட்டக்கமிஷனின் பதவிக்காலமும் முடிவடைந்து விடும். திட்டக்குழு உறுப்பினர்கள் பிரதம மத்திரியுடன் சேர்ந்து ராஜினாமா செய்ய வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT