Last Updated : 08 Mar, 2014 01:25 PM

 

Published : 08 Mar 2014 01:25 PM
Last Updated : 08 Mar 2014 01:25 PM

Bank run - என்றால் என்ன?

வங்கிகளின் வியாபாரத்தைக் கூர்ந்து கவனித்தால், ஒரு வங்கி பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் சிறு சிறு தொகைகளை வைப்பு நிதியாகப் பெற்று, அதனை சில ஆயிரம் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் பெரிய தொகையை நீண்டக் காலக் கடனாகக் கொடுத்துள்ளனர். ஆக, வங்கிகள் சிறு தொகைகளைக் குறுகியகால வைப்புத் தொகையாக வாங்கி (liability), பெரிய தொகைகளாக நீண்ட காலக் கடனைக் கொடுத்துள்ளனர் (asset).

இவர்களின் assetக்கும் liabilityக்கும் உள்ள சமன்பாடு மிகவும் சிக்கலானது. திடீரென்று ஒரு வங்கியின் எல்லா வாடிக்கையாளர்களும் தங்களின் வைப்புத் தொகையை திரும்பக் கேட்டால், உடனடியாக வங்கியிடம் உள்ள assetயை உடைக்க முடியாது, அதாவது, கடன் கொடுத்தவர்களிடம் கடனை உடனடியாகக் கேட்க முடியாது. ஆனால், வைப்புக் கணக்கில் உள்ள பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை என்றாலோ, அல்லது காலம் தாழ்த்தி கொடுத்தாலோ, மற்ற வாடிக்கையாளர்கள் எல்லாரும் பயத்தின் காரணமாக தங்களின் வைப்புத் தொகையை எடுக்க வருவார்கள்.

இவ்வாறு ஒரே நேரத்தில் எல்லோரும் ஒரு வங்கியில் வைப்புத் தொகையை எடுக்க வருவதை bank run என்று குறிப்பிடுகிறோம்.

Lender of last resort

bank run ஏற்படும் என்று தெரிந்தும் ஏன் நாம் வங்கியில் வைப்புக் கணக்கு வைத்துள்ளோம்? ஒன்று, வங்கிகள் எப்போதும் ஓரளவிற்கு ரொக்கம் வைத்திருக்கும், மத்திய வங்கிகள் தங்களிடம் உள்ள பணத்தை பாதுகாப்பான முதலீடு செய்ய வேண்டும் என்று ‘இருப்பு விகிதம்’ கூறுகிறது என்பதை முன்பு பார்த்தோம்.

இவை எல்லாம் நம் பணம் வங்கியில் பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதிசெய்ய. இதனையும் தாண்டி bank run ஏற்பட்டால், ஒரு வங்கிக்குத் தேவையான பணத்தை கடனாகக் கொடுக்க மத்திய வங்கி தயாராக உள்ளது. மத்திய வங்கியின் இச்செயலை Lender of last resort என்பர். அதாவது, வங்கிகளின் பணத் தேவைக்கு கடைசியில் கைகொடுப்பது மத்திய வங்கி. மத்திய வங்கியின் இச்செயல் நமக்கு வங்கிகள் மேல் கூடுதல் நம்பிக்கையைக் கொடுக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x