Published : 17 Jan 2014 10:17 AM
Last Updated : 17 Jan 2014 10:17 AM

பொருளாதார வளர்ச்சி இரண்டாவது அரையாண்டில்தான்: மூடி’ஸ் அறிக்கை

எதிர்வரும் தேர்தல் முடிவுகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சர்வதேச தரச்சான்று நிறுவனமான மூடி’ஸ் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டின் இரண்டாவது அரையாண்டில்தான் இருக்கும் என்றும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் இதில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் 2014-ல் தங்கத்தின் விலை ஸ்திரமாகவே இருக்கும் என்றும் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பொருளாதார நிலை சற்று மேம்படும் என்றும் தெரிவித்துள்ளது. சர்வதே அளவில் பொருளாத வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்தமட்டில் பொருளாதார வளர்ச்சி

2014-ம் ஆண்டின் பிற்பாதியில் மிக மெதுவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மே மாதத்தில் மக்களவைக்கு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இத் தேர்தல் முடிவுகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்று இந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் டாம் பைர்னே தெரிவித்தார். இதனிடையே 2014-15-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீத அளவுக்கு இருக்கும் என்றும் 2016-17-ல் 7.1 சதவீத அளவுக்கு உயரும் என்றும் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதி ஆண்டில் (2012-13) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாகச் சரிந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத சரிவாகும் இது. நடப்பு நிதி ஆண்டின் (2013-14) முதல் அரையாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.6 சதவீத அளவுக்கு இருந்தது. மார்ச் இறுதியில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீத அளவுக்கே இருக்கும் என்று அரசு நம்புகிறது. இந்தியாவின் பணவீக்க விகிதம் மற்றும் வட்டி விகிதம் நடப்பாண்டில் குறையும் என்றும் மூடி’ஸ் தெரிவித்துள்ளது. இந்திய அரசுக்கு பிஏஏ3 எனும் தரச்சான்றை இந்நிறுவனம் அளித்துள்ளது. இந்த குறியீடானது மத்திமமான தரத்தைக் குறிப்பதாகும். கடனை திருப்பிச் செலுத்தும் தன்மை ஓரளவு சிக்கல் நிறைந்ததாக இருக்கும் என்பதைக் குறிக்கிறது.

பற்றாக்குறை அளவு பிற நாடுகளில் உள்ளதைப் போலவே இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. சமூக பாதுகாப்பு திட்டங்களான உணவு பாதுகாப்பு சட்டம் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதனால் அரசின் செலவினம் அதிகரிக்கும் என்று பைர்னே குறிப்பிட்டார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மக்களவையில் உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறியது. இதனால் ஆண்டுக்கு அரசுக்கு ரூ. 1.30 லட்சம் கோடி கூடுதலாக செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதி ஆண்டில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்ட உற்பத்தியில் 4.8 சதவீத அளவுக்கு இருக்கும் அரசு எதிர்பார்க்கிறது. இதை 2016-17-ம் நிதி ஆண்டில் 3 சதவீதமாகக் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x