Published : 18 Jun 2017 11:16 AM
Last Updated : 18 Jun 2017 11:16 AM
சர்வதேச அளவிலான வங்கி களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 31.5 கோடி டாலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது. சமீபத்தில் வெளியான அவரது நிதித் தகவல்களின்படி இது தெரியவந்துள்ளது. பெடரல் பைனான்ஸ் வெளியிட்ட தகவல்கள்படி 2016-ம் ஆண்டில் அவரது வருமானம் 59.4 கோடி டாலராகும். 2017 ம் ஆண்டு நிலவரப்படி அவரது மொத்த சொத்து மதிப்பு 140 கோடி டாலராக இருந்தது. 2017-ம் ஆண்டின் தற்போதைய நிலவரப்படி அவரது தனிப்பட்ட கடன் 35.56 கோடி டாலராக உள்ளது. ஜெர்மன், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் உள்ள வங்கிகளுக்கு இதை அளிக்க வேண்டி உள்ளது.
அமெரிக்காவில் வெள்ளிக் கிழமை பெடரல் பைனான்ஸியல் இந்த தகவல்களை வெளியிட் டுள்ளது.
வாஷிங்டனில் புதிதாக திறந்த ஓட்டல் மூலம் சுமார் 2 கோடி டாலர் வருமானம் ட்ரம்புக்கு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகைக்கு அருகே இந்த ஓட்டல் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள மார் ல லோகோ உல்லாச விடுதியிலிருந்தும் வருமானம் அதிகரித்துள்ளது.
எத்திக்ஸ் ஆபிஸ் என்கிற இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ள 98 பக்க அறிக்கையில் ட்ரம்ப் அளிக்க வேண்டிய கடன்கள் குறித்து கூறப்பட்டுள்ளது. அதில் அமெரிக்க டாயிஷ் நிறுவனத்துக்கு 13 கோடி டாலர் கடன் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. முன்னதாக டாயிஷ் நிறுவனத்தின் கடன் 5 கோடி டாலரை தாண்டவில்லை என ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
தவிர லேடர் கேபிடல் நிறு வனத்துக்கு 11 கோடி டாலரும் அளிக்க வேண்டும் என்று குறிப் பிட்டிருந்தார். இந்த நிறுவனம் நியூ யார்க், லாஸ் ஏஞ்சலீஸ், புளோரிடா மாகாணங்களில் ரியஸ் எஸ்டேட் பணிகளை வர்த்தக ரீதியாக மேற் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோல்ப் விடுதி
அதிபர் ட்ரம்பின் வருமானத்தில் பெரும்பகுதியிலான பங்கு மியாமியில் கோல்ப் வசதி கொண்ட உல்லாச விடுதியிலிருந்து வருகிறது. 11.59 கோடி டாலர் இங்கிருந்து வருகிறது. ஆனால் முந்தைய ஆண்டு இங்கிருந்து 13.2 கோடி டாலர் வருமானம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான பல்வேறு நிறு வனங்களின் வருமானம் சீராக உள்ளது. குறிப்பாக மார் ல லோகோ வருமானம் 25 சதவீதம் உயர்ந்து 3.72 கோடி டாலராக உள்ளது. ட்ரம்ப் தேர்தலில் நின்ற பிறகு இந்த நிறுவனம் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியுள்ளது. 1.1 கோடி டாலர் வருமானத்தை மிஸ் யுனிவர்ஸல் போட்டியிலிருந்து இந்த விடுதி ஈட்டியுள்ளது.
ட்ரம்ப் அமெரிக்க அதிப ராவதற்கு முன்பு அதிகாரியாக 565 நிறுவனங்களில் பதவி வகித்த விவரங்களையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த பதவிகள் எல்லாம் ஜனவரி 19 தேதியுடன் முடிவடைந்துள்ளன. சம்பந்தப்பட்டுள்ள நிறுவனங்கள் அமெரிக்காவைத் தவிர, ஸ்காட்லாந்து, ஐயர்லாந்து, கனடா, பிரேஸில், பெர்முடா உள்ளிட்ட நாடுகளில் இருப்பவையாகும்.
வருமான வரிக் கணக்கு
ஆனால் ட்ரம்ப் தனது வருமான வரிக் கணக்கு விவரங்களை வெளியிட மறுத்து விட்டார். ஆனால் அவரது வருமானம், குடும்பத்தினரின் வருமானம் மற்றும் சொத்துகள், கடன்களை தெரிவித்துள்ளார் என்றும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT