Published : 20 Apr 2014 01:00 PM
Last Updated : 20 Apr 2014 01:00 PM

என்.ஆர்.ஐ. தொழிலதிபர் ஸ்வராஜ் பால் இந்தியா வருகை

வெளிநாடு வாழ் தொழிலதிபர், கொடையாளி ஸ்வராஜ் பால், தான் பிறந்த இடமான ஜலந்தருக்கு வந்தார்.

83-வயதான இவர், தன்னுடைய குடும்பத்தாருக்கு தன்னுடைய பாரம்பரியத்தை காண்பிப்பதற்கு வந்திருப்பதாக பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

பழைய ஞாபகங்களை பற்றிய பேசிய பால், நல்ல பள்ளிக் கல்வி கொடுத்தற்காக தன்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தான் படித்த தோபா பள்ளிக்கு சென்ற இவர், இது மறக்க முடியாத, உணர்ச்சிகரமாண தருணம், இப்போது உணர்ச்சிவசப்பட்ட சூழ்நிலையில் இருக்கிறேன். இங்கு படிக்கும் மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று தெரிவித்தார்.

மேலும் பள்ளியில் படித்த மாணவர்களுடன் உரையாடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த பள்ளியில் மரக்கன்று ஒன்றையும் நட்டார்.

இந்தியாவுக்கு தன்னுடைய குடும்பம், குழந்தைகள், பேரக் குழந்தைகளை அழைத்து வந்த பால், தான் படித்த இடம், படித்த பள்ளியை காண்பித்து, இந்த தருணம் விலை மதிப்பற்றது என்றார்.

தேர்தல் குறித்து கேட்டதற்கு, எந்த கட்சிக்கு ஓட்டு போடுகிறீர்கள் என்பதைவிட யார் மீது நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறீர்களோ அவர்களுக்கு ஓட்டுப்போடுங்கள் என்றார்.

என்னுடைய இந்த மேன்மை நிலைமைக்கு காரணமாக இருந்த எல்லா ஆசிரியர்களுக்கும் மன மார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x