Published : 16 Sep 2016 11:12 AM
Last Updated : 16 Sep 2016 11:12 AM
ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக நாணய மதிப்பை குறைக்க மத்திய வர்த்தக அமைச்சகம் விவாதித்து வருவதாக எழுந்த செய்தியை அடுத்து, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்து, பிறகு மீண்டும் உயர்ந்தது.
புதன் கிழமை வர்த்தகத்தின் முடிவில் ஒரு டாலர் ரூ.66.88 என்ற நிலையில் இருந்தது. நாணய மதிப்பு சர்ச்சை வெளியானதை தொடர்ந்து நேற்றைய வர்த்தகத்தின் இடையில் 0.28 சதவீதம் சரிந்து 67.07 ரூபாய் என்ற அளவில் இருந்தது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.19 சதவிதம் சரிந்து ரூ.67.03-ல் முடிவடைந்தது.
நாணய மதிப்பு குறைப்பு என்னும் தகவலை மத்திய நிதி அமைச் சகம் மறுத்திருக்கிறது. ரூபாய் மதிப்பு குறைப்பு பற்றி வெளியான செய்தியில் உண்மை ஏதும் இல்லை என பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். ரூபாய் மதிப்பு சந்தையால் தீர்மானிக்கப்படுகிறது. அதனை மாற்றும் கொள்கைத்திட்டம் ஏதும் அரசிடம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
வர்த்தக அமைச்சகம் வர்த்தக ரீதியிலான கொள்கைகளை வகுக்க முடியுமே தவிர நாணய மாற்று விவகாரங்கள் ரிசர்வ் வங்கியின் கீழ் வருபவை ஆகும். ரிசர்வ் வங்கி இதில் ஏதேனும் மாற்றம் செய்வதாக இருந்தால் கூட நிதி அமைச்சகத்தின் ஆலோசனையுடன் செய்யும்.
இது குறித்து வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டர் மூலம் பதில் அளித்துள்ளார். அதில், நாணய மதிப்பை குறைப்பது பற்றி எந்த நிருபரிடமும் நான் கூற வில்லை. என்னுடைய பேரில் வரும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற் றவை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து சரிந்து வருவதால், இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த வட்டி விகிதம் மற்றும் ரூபாய் மதிப்பை குறைக்க வேண் டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரு கின்றன. ஆனால் ரிசர்வ் வங்கி இது போன்ற முடிவுகளை பரிசீலனை செய்வதில்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறது. ரூபாய் மதிப்பு கடுமையாக சரியும் பட்சத்தில் மட்டும், சரிவை தடுக்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி ஈடுபடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT