Published : 27 Oct 2013 04:04 PM
Last Updated : 27 Oct 2013 04:04 PM
ஆன்லைன் மூலமான மோசடிகளைக் குறைக்க வங்கிகள் ரூ.350 கோடி வரை செலவிட்டுள்ளன. இதனால் 2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையான காலத்தில் தொழில்நுட்ப ரீதியில் மேற்கொள்ளப்படும் மோசடிகள் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2009-ம் ஆண்டிலிருந்து மோசடி களின் எண்ணிக்கை குறைந்துள்ள தாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அட்டவணை தெரிவிக்கிறது. நடப்பு ஆண்டில் மொத்தம் 8,765 மோசடி கள் இதுவரை பதிவாகியுள்ளன. இது 2009-ம் ஆண்டுடன் ஒப்பிடுகை யில் 13 சதவீதம் குறைவாகும். தொழில்நுட்ப ரீதியில் மோசடி செய்வோரைக் கண்காணிக்க அனைத்து தளங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தொழில் நுட்பத்தின் மூலமும், மனிதர்கள் கண்காணிப்பு மூலமாகவும் மோசடிகள் தடுக்கப்பட்டுள்ளதாக டாயிஷ் வங்கி தலைமை செயல்பாட்டு அதிகாரி (சிஓஓ) ராஜீவ் ராய் தெரிவித்தார். மோசடியில் ஈடுபடுவோர் தினசரி புதுப்புது உத்திகளைக் கையாள்கின்றனர். இவர்களது நடவடிக்கைகளைத் தடுக்க புதிய தடுப்பு முறைகளைக் கண்டுபிடித்து அதைப் பின்பற்ற வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மோசடியான இணையதளங் களை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் வங்கிகள் ஈடுபட்டுள்ளன.
இதன் மூலம் மோசடிப் பேர்வழிகள் மற்றும் உண்மையான வாடிக்கை யாளர்களை இனம்பிரித்து ஆன்லைன் மூலமான வர்த்தகத்தில் மோசடியின்றி நடைபெற வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். வங்கிகள் அடையாளம் காண்பதற்கு ஒருங்கிணைந்த முறையை செயல்படுத்துகின்றன. இதற்கென வங்கிகளில் பிரத்யேக மாக ஆன்லைன் வர்த்தகத்தைக் கண்காணிப்பதற்கென்றே தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கண்காணிப்புக் குழு ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் வாடிக்கை யாளர்கள் தங்களது வழக்கமான செயல்பாடுகளிலிருந்து மாறினால் இந்தக் குழு கண்டுபிடித்து அவர்களைக் கண்காணிக்கத் தொடங்கும். இணையதளம் மூலமான ஒவ்வொரு வர்த்தகமும் மிகவும் அபாயகரமான அதே சமயம் தொழில்நுட்பத்தில் விரைவில் நிறைவேறக்கூடிய பரிவர்த்தனையாகும்.
இதுபோன்ற ஆன்லைன் பரிவர்த்தனையில் வழக்கமாக வாடிக்கையாளர் பயன்படுத்தும் கம்ப்யூட்டரைத் தவிர்த்து வேறு கம்ப்யூட்டர் பயன்படுத்தப்பட்டாலும் அதுவும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும். அவ்விதம் பயன்படுத்தும் போது அந்த வாடிக்கையாளரின் உண்மைத் தன்மை குறித்து கேள்விகள் எழுப்புவோம் என்று ஹெச்டிஎப்சி வங்கியின் தலைமை முதலீட்டு அதிகாரி விஷால் சால்வி தெரிவித்தார்.
ஒவ்வொரு வாடிக்கையாளர் மேற்கொள்ளும் வர்த்தகத்தின் தன்மைக்கேற்ப அவரது உண்மைத் தன்மை கண்டறிவதற்கான தகவல்களை அடிக்கடி மாற்றிக் கொண்டேயிருப்போம் என்று அவர் மேலும் தெரிவித்தார். பெரிய நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனைக்கு டிஜிட்டல் சான்று முறையை டாயிஷ் வங்கி அறிமுகப் படுத்தியுள்ளது. இத்தகைய சான்றிதழை சான்று பெற்ற நிறுவனங்களிடம் நிறுவனங்கள் பெற வேண்டும். இவ்விதம் பெறப்பட்ட சான்று மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனையை எத்தகைய மோசடிப் பேர்வழியாலும் தகர்க்க முடியாது என்று ராய் தெரிவித்தார்.
ஸ்மார்ட்போன் மற்றும் பிராட்பேண்ட் சேவை மூலம் வங்கிகளில் தொழில்நுட்ப மோசடி செய்வோரின் விகிதம் அதிகரித்துள்ளது. நவீன தகவல் தொழில்நுட்ப உதவியில் மேற்கொள்ளப்படும் (சைபர் கிரைம்) குற்றங்கள் 42 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் அலைக்கற்றை மூலம் வங்கிக் கணக்குகளை செயல்படுத்துவோர் தங்களது பாதுகாப்பற்ற இணைய தள வழி மூலம் செயல்படுத்துவதே இத்தகைய குற்றங்கள் அதிகரிக்க முக்கியக் காரணமாகும்.
வங்கிகள் அனைத்து விதமான பரிவர்த்தனை தொடர்பான தகவல் களை உடனுக்குடன் வாடிக்கை யாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாகத் தெரிவிக்கிறது. பல சமயங்களில் இணையதளம் மூலமாகவும் தகவல் அனுப்பப்படுகிறது. பெரும்பாலான வாடிக்கை யாளர்கள் செல்போன் மூலமாக இணையதளத்துக்குச் சென்று வங்கிக் கணக்குகளைச் செயல் படுத்துகின்றனர். ஆனால் பெரும் பாலான வாடிக்கையாளர்கள் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதில்லை. இதனால் வாடிக்கை யாளர்களின் கம்ப்யூட்டர்கள் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகின்றன.
வங்கி பரிவர்த்தனை தொடர்பான முக்கிய விவரங்களை பகிர்ந்து கொள்ளக் கூடாது என்கிறார் ஆக்சிஸ் வங்கியின் சில்லறை வர்த்தகப் பிரிவுத் தலைவர் ராஜீவ் ஆனந்த் தெரிவித்துள்ளார். நவீன தொழில்நுட்பம் மூலமாக மேற்கொள்ளப்படும் மோசடிகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வங்கிகளும் விழிப் புணர்வு வகுப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இது வங்கியின் செயல்பாட்டுச் செலவை அதிக ரிக்கச் செய்தாலும், சிறந்த வாடிக்கை யாளரைத் தக்க வைத்துக் கொள்ள வும், மோசடிகளைத் தடுக்கவும் உதவுவதாக ராய் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment