Published : 10 Oct 2014 12:01 PM
Last Updated : 10 Oct 2014 12:01 PM
திட்டக்குழுவை கலைப்பதாக முடிவெடுத்தாலும் 12-வது ஐந்தாண்டு திட்டம் தொடரும் என்று நிதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்திருக்கிறது. இந்த திட்டம் வரும் 2017-ம் ஆண்டு மார்ச் வரை செயல்படும் என்று திட்டக்குழு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நாடாளுமன்ற குழுவின் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் வீரப்ப மொய்லி தலைமையிலான கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 2014-15ம் ஆண்டுக்கான ஒதுக்கீடு தொடர்பான கருத்துகளை கேட்டறிந்தார். இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டார். 12-வது ஐந்தாண்டு திட்டத்துக்கு 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் நாட்டின் வளர்ச்சியை 8 சதவீத அளவுக்கு உயர்த்தவும் 5 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும் இலக்காக அறிவிக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட அதிகாரி ஒருவர் கூறும்போது, அனைத்து மக்களுக்கும் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டை திட்டத்தை வரும் 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். இதற்கு முன்பு 2015 டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT