Published : 01 Jul 2016 09:59 AM
Last Updated : 01 Jul 2016 09:59 AM

வணிக நூலகம்: கட்டமைப்பான செயல்பாடு, கட்டுக்கடங்கா வெற்றி!

வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கை வரலாறு, வெற்றிக்கான சூத்திரங்கள், வெற்றிக்கான மந்திரங்கள் என எத்தனையோ புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு மத்தியில், நமது பணியில் திறம்பட செயல்பட்டு சாதனைபுரிய நாம் நமக்குள் எவ்விதமான கட்டமைப்பினை மேற்கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி சொல்கின்றது “டிரஸ்ட் யுவர் வைப்ஸ் அட் வொர்க் அண்ட் லெட் தெம் வொர்க் பார் யு” என்ற இந்த புத்தகம். இதில் அடிப்படை ஏற்பாடுகள் தொடங்கி, சிறு சிறு மேம்பட்ட செயல்பாடுகளின் வாயிலாக, இறுதியில் இலக்கை அடையும் வரையிலான அனைத்து நிலைகளுக்குமான வழிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

தீர்வை நோக்கி செல்லும் முன், பிரச்சினை என்னவென்று தெரிந்து கொள்ளவேண்டும் அல்லவா!. பணி யில் ஏற்படும் பிரச்சினைகளே பெரும் பாலானவர்களுக்கு பெரும் தலை வலியை உண்டாக்குகின்றது. இளை ஞர்கள், பெரியவர்கள், நன்கு படித் தவர்கள், சுயதொழில் செய்பவர்கள், மிகப்பெரிய பணியில் இருப்பவர்கள் என எந்த பிரிவை சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்களுடைய பணியிட போராட்டம் மற்றும் பிரச்சினை என்பது பொதுவான ஒன்றே. அவை, ஒரே மையக்கருத்தினை உடைய, வேறுபட்ட பரிணாமங்களைக் கொண்டதாகவே உள்ளதாக தெரிவிக்கின்றார் ஆசிரியர். மேலும், அவற்றில் சிலவற்றை குறிப்பிட்டும் உள்ளார்.

தோல்வியடைந்துவிடுவேன் என்று பயமாய் இருக்கின்றது, எனது வேலையை இழந்துவிடுவேன் என்று தோன்றுகிறது, வேலையில் சரியான முன்னேற்றம் காணமுடியவில்லை, எனது வேலை சலிப்பை உண்டாக்கு வதாகவும் அதனால் எனது நேரம் பெரு மளவு விரயமாவதாகவும் உள்ளது. இவையெல்லாவற்றையும் விட “எனது இந்த வேலையின் மூலம் போதுமான அளவிற்கு பணம் சம்பாதிக்க முடியவில்லை” என்ற முக்கியமான பிரச்சினையையும் குறிப்பிட்டுள்ளார்.

எண்ணம் அமைப்போம்!

எந்தவொரு செயலானாலும் அதற் கான சரியான கருத்தாக்கமே அச் செயலை சரியான பாதையில் பய ணிக்க வைக்கும். வெற்றி பெறுவதற்கான நமது நம்பிக்கையின் தெளிவான சிந்தனையுடனேயே நமது ஒவ்வொரு வேலை நாளையும் தொடங்கவேண்டியது மிகவும் முக்கியம் என்கிறார் ஆசிரியர். மேலும், சரியான கருத்தாக்கம் அல்லது சிந்தனை இல்லாமல் அன்றைய குறிப்பிட்ட வேலையை தொடங்கும் நிலையில், படைப்பாற்றலுக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிடுகின்றன என்கிறார்.

சவால்களையும் இலக்குகளையும் தீர்மானிக்கும் நமது வேலையை, தனிப்பட்ட ராஜ்யமாக கருதும்படி சொல்கிறார் ஆசிரியர். மன ரீதியாக தினமும் காலையில் இந்த ராஜ்யத்தை பார்வையிட்டு அதன் அனைத்து அம்சங்களையும் சோதனையிடுமாறு வலியுறுத்துகிறார். பின்பு கவனிக்கப் பட்ட மற்றும் உருவாக்க உத்தேசித் துள்ள திட்டங்களின் அடிப்படையில் அன்றைய பணியை மனத்திரையில் வரையறை செய்துக்கொள்ள வேண் டும் என்கிறார். சிந்தனைக்கான அமைப் பினை சரியாக முடிவு செய்வதற்கான மிக சிறந்த வழி, காட்சிப்படுத்தும் கலையே என்பதே ஆசிரியரின் வாதமாக இருக்கின்றது.

வழக்கமான நேரத்திற்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்பே தூக்கத்தி லிருந்து எழுந்து, அன்றைய நாளின் ஒவ்வொரு சந்தர்ப்பங்கள், செய்ய வேண்டிய பணிகள் மற்றும் எதிர்கொள் ளும் நபர்கள் என அனைத்தையும் கற்பனை செய்துபாருங்கள். ஒவ் வொரு திட்டம் மற்றும் பணியினை மென்மையாக வழிந்தோடும்படி மனத் திரையில் உருவகப்படுத்துங்கள். ஆழ மான சுவாசத்திற்கு பின் எதிர்வரும் அன்றைய நாளின் மிகச்சிறந்த வெற்றியை எதிர்நோக்கியபடி படுக்கை யறையை விட்டு நம்பிக்கையுடன் வெளியே வாருங்கள் என்கிறார். இந்த கற்பனை பார்வையை ஒருபோதும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று கூறும் ஆசிரியர், சில நிமிடங்களே தேவைப்படும் இந்த செயலே சாதாரண நாளை சாதனையான நாளாக மாற்றும் என்கிறார்.

பணியிடச் சூழல்!

வேலையின் செயல்பாட்டிற்கு தேவையான ஆற்றலைக் கொடுப்பதில் சூழ்நிலையானது முக்கிய பங்கு வகிக்கின்றது. இதன்மூலம் மிகச்சிறந்த உற்பத்தித்திறன் மற்றும் வெற்றி கிடைப்பதாக சொல்கிறார் ஆசிரியர். நாம் அதிக நேரம் செலவிடும் இடம், நமக்கு வருமானத்தை தரும் இடம், பாதுகாப்பினை அளிக்கும் இடம், பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கித்தரும் இடம் என பணிபுரியும் இடத்தின் சிறப்புகள் பல நிலைகளிலும் உண்டு. விளக்கு, மேஜை, ஜன்னல்கள், சுவர் என அனைத்திலும் கவனம் செலுத்தி, மனதில் எப்போதும் நேர்மறை எண்ணங்களே வழிந்தோடும் அளவிற்கு அவற்றில் மாற்றங்கள் செய்திட வேண்டும். அதன் கண்ணியத்தை காப்பதும், பணியிடத்தை புனிதமான இடமாக கருதுவதும் அவசியம்.

மற்றவர்களுக்கான மரியாதை!

மற்றவர்களை நோக்கிய உங்க ளது அணுகுமுறையினை நல்ல கண் ணோட்டத்தில் அமைத்துக்கொள்ள வேண்டும். பணியிடத்தினுள் ஒருவர் எப்படிப்பட்டவர், மேற்கொண்ட பணி யில் அவரது பங்கு என்ன என்பதுதான் முக்கியமே தவிர. பணியிடத்திற்கு வெளியே அவர் எப்படிப்பட்டவர் என்பதெல்லாம் அவசியமில்லை. ஆக, பணியிடத்தில் அவரவர்களுக்கான மதிப்பையும், மரியாதையையும் கவனமாக அளித்திட வேண்டும். சக பணியாளர்கள், மேலதிகாரி, குழு உறுப்பினர்கள், வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் என அனைவரிடத்திலும் கண்ணியமான போக்கினைக் கையாள வேண்டும் என்கிறார் ஆசிரியர். தொழிலில் மட்டுமின்றி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் இதுவே சக்திவாய்ந்த யுக்தியாகப் பார்க்கப்படுகின்றது.

வேலையின் நிமித்தம் எதிர்படு பவர்களிடம் கருணை மற்றும் நட்பான புன்னகையுடன் கூடிய வணக்கம் செலுத்துவதை வாடிக்கையாக வைத் துக்கொள்ளுங்கள். அவர்களது கண் களை நேருக்குநேராக பார்த்துப் பேசும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள் ளுங்கள். மற்றவர்களை கையாளும் நேரத்தில் ஆர்வமாகவும், பொறுமை யாகவும் இருக்கக் கற்றுக்கொள் ளுங்கள். எவ்விதத்திலும் அவர் களை எரிச்சலூட்டவோ அல்லது செயல் பாடுகளில் அவசரம் காட்டவோ வேண் டாம் என்கிறார் ஆசிரியர். முடிந்தவரை மற்றவர்களின் பெயர்களை ஞாபகம் வைத்துக்கொண்டு, அடிக்கடி பயன் படுத்துங்கள். குறுக்கீடு இல்லாமல் மற்றவர்களின் பேச்சைக் கேளுங்கள். முக்கியமாக, தேவையான அனைத்து சந்தர்ப்பங்களிலும் நன்றி சொல்ல மறக்காதீர்கள்.

உங்களுக்கான மரியாதை!

மற்றவர்களுக்கான மரியாதை எவ்வளவு அவசியமோ, அதே அளவிற்கு நாம் நமக்களிக்கும் மரியாதையும் அவசியமான ஒன்றே. உங்களுக்கான மரியாதையை, உங்களைத் தவிர வேறு யாராலும் சரியாக கொடுத்துவிட முடியாது அல்லவா!. குறிப்பாக பணியிடத்தில், சுய மரியாதை மற்றும் சுய பாராட்டு ஆகியவற்றைப் பெற்றிருப்பது, மற்ற வர்களிடத்திலும் அதனை நீட்டிக்கச் செய்வதற்கான மிகச்சிறந்த வழி என்கிறார் ஆசிரியர். உங்களது நேர்மையை சமரசம் செய்துகொள்ளும் சூழ்நிலைகளிலிருந்து விலகிச்செல் லும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளுதல், வெற்றிபெற என்ன தேவை என்பதை உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் நமக்கான சுய மரியாதையை நம்மிடம் ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

வீட்டுப்பாடம் வேண்டும்!

எந்தவொரு பணியானாலும் முறை யான ஹோம்வொர்க் இல்லாத நிலையில், அது பெரியளவில் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்கிறார் ஆசிரியர். பணியிட நபர்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் கவனமாக கேளுங்கள். எதையும் புறக்கணிக்காமல் ஒவ்வொன்றையும் மிகச்சரியாக உற்று நோக்குங்கள். எப்போதெல்லாம் முடி கிறதோ அப்போதெல்லாம் நேரடி நடைமுறை அனுபவங்களை பெறத் தவறாதீர்கள். இதுவே அனைத்திற்கு மான மிகச்சிறந்த ஆசானாக உள்ளது. கேள்வி கேளுங்கள், இதுவே சரியான செயல்பாட்டில் ஆர்வமுடன் இருக் கின்றீர்கள் என்பதற்கான அறிகுறி.

மறப்போம் மன்னிப்போம்!

மனமோ அல்லது உடலோ எதுவா யினும் அதன் ஆரோக்கியத்தில் மன் னிக்கும் மனோபாவம் பெரும்பங்கு வகிக்கின்றது. மேலும், வாழ்நாளை அதிகரிக்கச்செய்யும் ஆற்றலும் இதற் குண்டு. நமது விழிப்புணர்வின் செயல் பாட்டினை அதிகரிக்கச்செய்கின்றது. ஆற்றலை அதிகரித்து மற்றவர்களை நம்பால் ஈர்க்கச் செய்கின்றது. நம் முடைய வாழ்க்கையை மட்டுமின்றி, நம் மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை யையும் எளிதானதாக மாற்றுகின்றது.

எதையும் தனிப்பட்ட முறையில் கருதாமை, தவறுகளின் மீதான அணுகுமுறை, ஏற்படும் தவறுகளில் நமது பொறுப்புணர்வு, ஒவ்வொரு நிகழ்வையும் வாய்ப்பாக கருதும் மனநிலை, வலிமையான நகைச்சுவை உணர்வு மற்றும் நேர்மறையான நிகழ்வுகளில் கவனம் செலுத்துதல் போன்றவற்றின் மூலமாக மன்னிக்கும் மனநிலையை வளர்த்துக்கொள்ளலாம்.

அனைத்து வழிகளிலும் நமக்கும் மற்றவர்களுக்கும் உண்மையாக இருந்து செயல்படும்பட்சத்தில், நம்மால் எளிதாக வெற்றிக் கனியை ருசிக்கமுடியும்.

p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x