Published : 13 Oct 2014 11:40 AM
Last Updated : 13 Oct 2014 11:40 AM
பங்குச் சந்தையில் பட்டியலிட்ட நிறுவனங்கள் விருப்ப ஒதுக்கீடு பங்கு மூலம் திரட்டிய தொகை ரூ. 15,997 கோடியாகும். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையான காலத்தில் இத்தொகை திரட்டப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த நான்கு ஆண்டுகளில் திரட்டப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைந்த அளவாகும்.
கடந்த ஆண்டு இதே காலதில் (ஏப்ரல்-ஆகஸ்ட்) நிறுவனங்கள் விருப்ப பங்கு ஒதுக்கீடு மூலம் ரூ. 30,560 கோடியைத் திரட்டின.
இந்த ஆண்டு மொத்தம் 223 நிறுவனங்கள் விருப்ப பங்கு ஒதுக்கீடு மூலம் திரட்டிய தொகை ரூ. 15,997 கோடியாகும். 2011-12-ம் நிதி ஆண்டிலிருந்து இதுவரையான நான்காண்டு காலத்தில் இது மிகக் குறைந்த அளவாகும். 2013-14-ம் நிதி ஆண்டில் ரூ. 30,560 கோடியும், 2012-13-ம் நிதி ஆண்டில் ரூ. 36,384 கோடியும், 2011-12-ம் நிதி ஆண்டில் ரூ. 19,377 கோடியையும் நிறுவனங்கள் திரட்டியுள்ளன.
விருப்ப பங்கு ஒதுக்கீட்டில் திரட்டும் தொகை குறைந்ததற்கு நிறுவன சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டதே காரணம் என்று சிஎன்ஐ பகுப்பாய்வு நிறுவனத்தின் தலைவர் கிஷோர் ஆஸ்வால் தெரிவித்துள்ளார்.
புதிய விதிமுறைகள் மிகவும் கடுமையானதாக உள்ளன. பெரும்பாலான நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள் மிகவும் குழப்பமாக உள்ளதால் போதிய தகவல்களை அளிக்க முடிய வில்லை. புதிய நிறுவன விதிகள் சட்டத்தின்படி நிறுவனங்கள் விருப்ப பங்கு ஒதுக்கீட்டுக்கு பல்வேறு விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.
நிறுவனங்களின் லாபத்தி லிருந்து விருப்ப ஒதுக்கீடு பங்குகளை மறு ஒதுக்கீட்டுக்கு (ரிடீம்) அளிக்க வேண்டும் என்று புதிய விதி கூறுகிறது. லாபத்தின் அளவுக்கு சம மதிப்பிலான பங்குகள் மாற்றப்பட்டு அது முதலீட்டு மறு ஒதுக்கீடு கணக்கில் வைக்கப்பட வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனங்கள்
ரூ. 2,265 கோடியைத் திரட்டின. இது முந்தைய மாதத்துடன் அதாவது ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகமாகும். ஜூலை மாதத்தில் ரூ. 2,159 கோடி திரட்டப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் ஏப்ரல் மாதத்தில் ரூ. 3,160 கோடியும், மே மாதத்தில் ரூ. 5,142 கோடியும், ஜூன் மாதத்தில் ரூ. 3,271 கோடியும் திரட்டியுள்ளன. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையான காலத்தில் அதிகபட்சம் 100 நிறுவனங்கள் தேசியபங்குச் சந்தையில் பட்டியலிட்டன. விருப்ப பங்கு ஒதுக்கீட்டு மதிப்பு ரூ. 2,650 கோடியாகும்.
இது தவிர மும்பை பங்குச் சந்தையில் 35 நிறுவனப் பங்குகள் ரூ. 1,756 கோடிக்கு ஒதுக்கப்பட்டன. 88 நிறுவனப் பங்குகள் ரூ. 11,591 கோடியை திரட்டின.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT