Last Updated : 07 Nov, 2013 12:00 AM

1  

Published : 07 Nov 2013 12:00 AM
Last Updated : 07 Nov 2013 12:00 AM

நிதி சேவைகள்
 என்றால் என்ன?

நமக்குப் பல விதமான நிதி சேவைகள் தேவை. பணத்தைக் கொடுக்க, வாங்க, பங்கு, கடன் பத்திரங்கள், வாங்க, விற்க, எல்லாவற்றிற்கும் தரகரின் சேவை தேவைப்படுகிறது. இவ்வாறான பரிவர்த்தனையை முடித்து வைக்க ஒரு எக்ஸ்சேஞ்சின் சேவை தேவைப்படுகிறது. முதலீட்டு ஆலோசனை வழங்க, சந்தைப்படுத்த என்ற பலவகை நிதி சேவைகள் தேவைப்படுகிறது.

Financial Intermediation என்பது மிக முக்கியமான நிதி சேவை. சேமிப்பவர்க்கும், பணத்தைக் கடன் வாங்குபவர்க்கும் இடையே ஒரு இணைப்புப் பாலமாக இருப்பதுதான் Financial Intermediation. உதாரணமாக, வங்கிகள் நம்மிடம் வைப்புத் தொகையை வாங்கி, அதனைத் தொழில் முனைவோருக்கும், கடன் பெறுபவர்களுக்கும் கொடுத்து இவர்களிடையே ஒரு இணைப்புப் பாலமாக இருக்கிறது. இப்போது, கணினி மூலமாகப் பணம் செலுத்தும் முறை வந்துள்ளதால், அதற்கான Financial Intermediation-னும் உருவாகியுள்ளது.

நிதி சந்தையில் முதலீடு செய்பவர்களுக்குப் பல விதமாக ரிஸ்க் ஏற்படுகிறது. இந்த ரிஸ்க்கை பலருக்குப் பகிர்ந்தளிக்கவும், மற்றவர்களின் ரிஸ்க்கை தான் ஏற்றுக்கொண்டு அதனால் வருவாய் பெற நினைப்பவர்களுக்கு ரிஸ்க்கை மாற்றம் செய்வதும் நிதி சேவைகளில் அடங்கும். இதில் காப்பீடு (Insurance)சேவையும் அடங்கும்.

முதலீடு செய்பவர்களின், கடன் பெறுபவர்களின், பல விதமான ரிஸ்க் எடுப்பவர்களின் மாறிவரும் தேவைக்கேற்ப அவ்வப்போது புதிய பத்திரங்களை வடிவமைத்துச் செயல்படுத்துவது Financial Engineering எனப்படும் நிதி சேவை.

முதலீட்டு ஆலோசனை வழங்குவதும் ஒரு முக்கிய நிதி சேவை.

பல விதமான நிதி சந்தைகளை ஒழுங்கு படுத்துவதும், கட்டுபாட்டிற்குள் செயல்பட வைப்பதும் ஒரு மிக முக்கியமான நிதி சேவை. உதாரணமாக, வங்கிகளை, பணச் சந்தையை ரிசர்வ் வங்கி ஒழுங்குபடுத்துகிறது.

இரண்டாம்நிலை பங்கு பரிவர்த்தனை நடைபெறும் பங்கு சந்தையை ‘செபி’ கட்டுப்படுத்துகிறது. இந்த ஒழுங்குபடுத்துதலும், கட்டுபடுத்துதலும் இல்லை என்றால் நிதி சந்தையில் யாருக்கும் நம்பிக்கை இல்லாமல் நிதி அமைப்பே இல்லாமல் போகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x