Last Updated : 31 Aug, 2016 10:38 AM

 

Published : 31 Aug 2016 10:38 AM
Last Updated : 31 Aug 2016 10:38 AM

அயர்லாந்துக்கு ஆப்பிள் நிறுவனம் ரூ.1 லட்சம் கோடி வரி செலுத்த வேண்டும்: ஐரோப்பிய யூனியன் உத்தரவு

ஆப்பிள் நிறுவனம் அயர்லாந்து நாட்டுக்கு 1,300 கோடி யூரோ செலுத்த வேண்டும் என ஐரோப்பிய யூனியன் உத்தரவிட்டுள்ளது. இந்திய மதிப்பின்படி இது சுமார் ரூ.96,267 கோடியாகும். ஆப்பிள் நிறுவனம் ஒப்பந்தபடி அயர்லாந்து நாட்டுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் மோசடி செய்துள்ளது என்றும், அந்த தொகையை செலுத்த வேண்டும் என நேற்று உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கூறியுள்ள ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு நிர்வாகம், ஆப்பிள் நிறுவனம் தங்களது அனைத்து லாபத்துக்கும் வரி செலுத்துவதை தவிர்த்துள்ளது. அயர்லாந்தில் தங்களது நிறு வனத்தை அமைத்துள்ளதற்கு கட்ட வேண்டிய வரியாகும். ஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்கா நிறுவனங் கள் அயர்லாந்தில் தொழில் தொடங்க அந்த நாடு பல வரி சலுகைகளை வழங்கி இருக்கிறது.

ஐரோப்பிய கூட்டமைப்பின் விசாரணையில் அயர்லாந்து சட்டத்துக்கு புறம்பாக ஆப்பிள் நிறுவனத்துக்கு வரிச் சலுகைகளை அனுமதித்துள்ளது தெரிய வந்தது. பல ஆண்டுகளாகவே இதர தொழில்களைக் காட்டிலும் கணிசமான வரி குறைப்புகளை செய்துள்ளது என்று ஐரோப்பிய நியாயமான தொழில் போட்டி கூட்டமைப்பின் தலைவர் மார்கரேட் வெஸ்டஹெர் தெரிவித்தார்.

டிம் குக் கருத்து

இதையொட்டி அயர்லாந்துக்கு 1,300 கோடி யூரோ மற்றும் அதற் கான வட்டியை ஆப்பிள் செலுத்த வேண்டிய நிலையில் இந்த விசாரணை அரசியல் பைத்தியக் காரத்தனம் என்றும், 2015-ம் ஆண்டு அயர்லாந்து தனது வரிச் சட்டங்களை மாற்றியமைத்தது, எனவே இதற்கு எதிராக மேல்முறையீடு செல்வோம் என்று ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக் கூறியுள்ளார்.

குறிப்பிட்ட வரி ஒப்பந்தத்தில் ஐரோப்பிய பிரிவில் கிடைக்கும் லாபத்துக்கு ஒரு சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்று ஒப்பந்தத்தில் உள்ளது. 2003-ம் ஆண்டு ஒரு சதவீதமாக இருந்த வரி குறைக்கப்பட்டு 2014-ம் ஆண்டு 0.005 சதவீதமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x