Last Updated : 20 Oct, 2014 10:21 AM

 

Published : 20 Oct 2014 10:21 AM
Last Updated : 20 Oct 2014 10:21 AM

ஹுத் ஹுத் புயல் பாதிப்பு: ஆந்திரம், ஒடிசாவிலிருந்து குவியும் காப்பீடு விண்ணப்பங்கள்

சமீபத்தில் ஆந்திரம் மற்றும் ஒடிசாவை தாக்கிய ஹுத் ஹுத் புயல் பாதிப்பு காரணமாக இழப்பீடு கோரி காப்பீட்டு நிறுவனங்களுக்கு அதிக எண்ணிக் கையில் விண்ணப்பங்கள் வந்து குவிகின்றன. இவ்விரு மாநிலங் களிலிருந்து வந்து குவியும் விண்ணப்பங்களை பரிசீலித்து அவற்றுக்கு நிவாரணம் அளிக்கும் பணியில் காப்பீட்டு நிறுவனங்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன.

ஆந்திரம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் இழப்பீடு கோரும் விண்ணப்பங்கள் வந்துள்ளன. முதல் கட்டமாக அவற்றுக்கு இடைக்கால நிவாரணம் அளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இழப்பீட்டின் மதிப்பு அளவீடு செய்யப்பட்டு இந்த நிதி ஆண்டு இறுதிக்குள் முழுவதுமாக அளிக்கப்படும் என்று நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜி. னிவாசன் தெரிவித்துள்ளார். காப்பீடு மற்றும் மறு காப்பீடு செய்யப்பட்டுள்ள தொகை மிகவும் அதிகமாக இருக்கும். இருப்பினும் காப்பீடு செய்துள்ள தொகையின் அளவை மதிப்பிடும் பணி நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் இது போன்று ஓரிரண்டு இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்பீட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்து உடனடி யாக தெரிவிக்க முடியாது. கடந்த ஆண்டு உத்திராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் அதிக இழப்பீடு அளிக்க வேண்டியிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். இப்போதைய ஹுத் ஹுத் புயலால் விசாகப்பட்டினம் பகுதியில் ஏற்பட்டுள்ள இழப்பீட்டின் அளவை முழுமையாக மதிப்பீடு செய்ய சிறிது காலம் ஆகும் என்றார்.

ஹுத் ஹுத் புயல் காரணமாக ஏற்பட்ட முழு பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்த பிறகே காப்பீட்டு நிறுவனங்கள் இதை எவ்விதம் எதிர்கொள்வது என்பது குறித்து வரையறுக்க இயலும் என்றார். காப்பீட்டு நிறுவனங்களின் சங்கத்துக்கு (ஜிஐபிஎஸ்ஏ) தலை வராகவும் னிவாசன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மறு காப்பீட்டுத் தொகை பொது வாக குறைவாகத்தான் இருக்கும். பொதுவாக மறு காப்பீடு செய்வோர் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இடர்பாடுகளை விரும்புவதில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

மார்ச்-ஏப்ரல் மாதங்களில் மறு காப்பீடு பிரீமியம் புதுப்பிப்பு வரும்போதுதான் இழப்பீட்டுத் தொகை எவ்வளவு வழங்கப்பட்டது என்பதை முழுமையாகக் கூற முடியும் என்றும் அவர் குறிப் பிட்டார்.

இதனிடையே புயல் பாதித்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு உதவுவதில் பல்வேறு நடவடிக் கைகளை தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. ஐசிஐசிஐ லொம்பார்ட் நிறுவனம் மோட்டார் வாகனம், வீடு, தனி நபர் காப்பீடு உள்ளிட்ட நிவாரணங்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு உடனடியாகக் கிடைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தனி தொலைபேசி வசதியையும் இந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.

காப்பீடு செய்துள்ள வாடிக்கை யாளர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக ஐசிஐசிஐ லொம்பார்ட் நிறுவன தலைவர் சஞ்சய் தத்தா தெரிவித்துள்ளார். இந்தப் பகுதியில் இழப்பீடுகளை மதிப்பீடு செய்வதற்காக மதிப்பீட்டாளர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். இழப்பீடு கோரிக்கை களை உடனடியாக பைசல் செய் வதற்கு தலைமை அலுவலகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தத்தா கூறினார்.

ஜம்மு காஷ்மீர் பகுதியில் 3,000 இழப்பீட்டு கோரிக்கைக்கு இதுவரை ரூ. 127 கோடி இழப்பீடு அளிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீனிவாசன் கூறினார்.

இதனிடையே மோட்டார் வாகன இழப்பீடு மற்றும் வீடு சேத இழப்பீடு குறித்த விண்ணப்பங்களை பரிசீலித்து இழப்பீடு வழங்க 150 பேர் கொண்ட மதிப்பீட்டாளர் குழுவை நியமித்துள்ளதாக பஜாஜ் அலையன்ஸ் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x