Published : 05 Apr 2014 12:00 AM
Last Updated : 05 Apr 2014 12:00 AM
வாராக் கடன் விஷயத்தில் வங்கிகள் மென்மையான போக் கைக் கடைப்பிடிப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் குற்றம் சாட்டினார்.
வாராக் கடன் அளவை நிர்ணயிக்கும் விஷயத்தில் வங்கிகள் செயற்கையான அளவை நிர்ணயிப்பதாக அவர் குறை கூறினார். இத்தகைய செயற் கையான அளவு பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
வேண்டுகோள்
வாராக் கடனை மூன்று ஆண்டு களுக்கு கிடப்பில் போடும்படி வங்கியில் கடன் பெற்றுள்ள நிறுவன அதிபர்கள் உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இவற்றை `பேட் லோன்’ என்ற பிரிவில் சேர்ப்பது செயற்கையான அளவாக அமையும்.
இதற்குரிய சரியான அளவை நிர்ணயிக்க வேண்டும். வாராக் கடன் வசூலை மூன்று ஆண்டுகளுக்கு தள்ளிப் போடுவது பிரச்சினையைத் தீர்க்க உதவாது என்றும் அவர் கூறினார்.
இன்று கடனை திரும்ப செலுத்தாதவர்கள், நாளைக்கு மட்டும் எப்படி திரும்ப செலுத்து வார்கள் என்று கூற முடியும்? எனவே வாராக் கடன் வசூலுக்கான சொத்துகளை வருமானம் தரும் சொத்தாக மாற்றுவதே சரியான வழியாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
அதிக கடன்
டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் வங்கிகளின் வாராக் கடன் அளவு முன்னெப்போதும் இல்லாத அளவாக 5 சதவீதத்தை எட்டியுள்ளது. 2014-ம் நிதி ஆண்டில் வங்கிகள் ஒரு லட்சம் கோடியை கடனாக அளித்துள்ளன. இதுவரை வங்கிகள் அளித்துள்ள கடன் அளவு ரூ. 4 லட்சம் கோடியாகும்.
6 சதவீத வட்டிக்குக் கடன் வாங்கி அதை 8 சதவீதம் முதல் 10 சதவீதம் வரையில் வங்கிகள் கடன் அளிக்கின்றன. வட்டி மூலமான வருமானம் 3 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை உள்ளது. கடனை வசூலிக்காவிட்டால் அது வங்கிகளின் கணக்கில் வாராக் கடனாக சேர்ந்துவிடும். வங்கிகள் இந்த விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். செலவைக் குறைக்க வேண்டும். அதன் மூலம்தான் வங்கிக் கணக்கில் வாராக் கடன் அதிகரிப்பதைத் தடுக்க முடியும். ஆனால் இதை செய்வது மிகவும் கடினமான விஷயம் என்று ராஜன் குறிப்பிட்டார்.
வாராக் கடனுக்கு சலுகை எதிர்பார்ப்பதைவிட கடனை செலுத்தாத நிறுவனங்களின் சொத்துகள் மூலம் வருமானம் ஈட்ட முயற்சிக்க வேண்டும். சொத்துகளை மாற்று வழியில் பயன்படுத்துவற்கான வழிகளைக் காண வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
அடுத்த சில ஆண்டுகளில் கட்டமைப்பு வசதிகள் பெருமளவில் வளர்ச்சியடைய உள்ளன. இந்தத் திட்டப் பணிகளுக்கு பெருமளவில் கடன் அளிக்க வேண்டியிருக்கும். இந்த விஷயத்தில் வங்கிகள் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது என்று குறிப்பிட்ட அவர். சமீபத்தில் கட்டமைப்புத் திட்டங்களுக்கு அளித்த கடனும் வாராக் கடனாக சேர்ந்துள்ளது மிகவும் துரதிருஷ்டவசமானது என்று சுட்டிக் காட்டினார்.
சில நிதி நிறுவனங்கள் தங்களது கணக்குகளை மிகத் தெளிவாகக் கையாள்கின்றன. வாராக் கடன் அதிகரித்துள்ள நிலையில் கட்டமைப்புத் திட்டங்களின் கடந்த கால செயல்பாட்டைக் கருத்தில் கொண்டு கடன் அளிக்க வேண்டும். எனவே வங்கிகள் தங்கள் கணக்கில் வாராக் கடன் அளவைக் குறைக்க முயல வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஐந்தாண்டு திட்ட காலத்தில் ஒரு லட்சம் கோடி டாலர் முதலீடுகளை கட்டமைப்புத் துறையில் ஈர்க்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT