Published : 05 Sep 2014 10:21 AM
Last Updated : 05 Sep 2014 10:21 AM

கார்களுக்கு எல்பிஜி, சிஎன்ஜி கிட்

இத்தாலியைச் சேர்ந்த வாகனங்களுக்கான மாற்று எரிபொருள் உபகரணங்களை தயாரிக்கும் ஜிஎப்ஐ நிறுவனம் இந்தியாவில் தனது முகவரை நியமித்து தனது உபகரணங்களை சந்தைப்படுத்தத் தொடங்கியுள்ளது.

வாகனங்களில் 30 ஆண்டுகளுக்கு மேலாக மாற்று எரிபொரு ளுக்கான உபகரணங்களை தயாரிக்கும் உலக அளவில் பிரபலமான இத்தாலியைச் சேர்ந்த ஜி.எப்.ஐ. நிறுவனம் இந்தியாவில் தனது எல்பிஜி மற்றும் சிஎன்ஜி உபகரணங்களை விற்பனை செய்ய இந்தியாவின் பிரத்யேக டீலராக திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கே.ஆர். பியூல்ஸ் நிறுவனத்தை நியமித்துள்ளது.

கார்களில் பெட்ரோல் பயன்படுத்துவதால் அதிலிருந்து வெளிப்படும் புகையில் உள்ள நச்சுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. ஆனால், மாற்று எரிபொருளான எல்.பி.ஜி. மற்றும் சிஎன்ஜி பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கலாம். இது உலக அளவில் நிருபிக்கப்பட்டுள்ளது.

எல்.பி.ஜி. பயன்படுத்தும் கார்கள் ஆபத்தானவை, தீப் பிடித்து விடும் என்ற எண்ணம் மக்கள் மனதில் இருக்கிறது. ஆனால், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த எல்பிஜி கிட் பயன்படுத்தும் போது ஆபத்து ஏதும் ஏற்படாது என்பதை உறுதியாக சொல்ல முடியும். சிலர் வீட்டுக்கு பயன்படுத்தும் சிலிண்டரை வாகனங்களில் பயன் படுத்துகின்றனர். இது தவறானது. வீட்டுக்குப் பயன்படுத்தும் காஸ் மற்றும் வாகனங்களுக்கு பயன்படுத்தும் காஸ் இரண்டும் வெவ்வேறு தன்மைகளை உடையவை.

மேலும், எல்பிஜி எரிபொருளாக பயன்படுத்தப்படும் கார்களில் பிக்-அப் இருக்காது. அடிக்கடி பிரச்சினை ஏற்படும் என்பதெல்லாம் அதில் பொருத்தப்பட்டுள்ள காஸ் கிட் முறையான தொழில்நுட்ப அம்சங்கள் இல்லாததால்தான்.

இந்தியாவிலேயே முதன் முறையாக ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட டைனமோ மீட்டர் என்ற சாதனத்தின் உதவியோடு வாகனத்தை நிறுத்தி வைத்தே அதன் இன்ஜினை 140 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி கணினி உதவியோடு புரோகிராம் செய்வதால் வாகனம் எந்த வேகத்தில் இயங்கினாலும், பெட்ரோல் மூலம் இயங்குவது போலவே எந்த பிரச்சினையும் இல்லாமல் இயங்கும்.

இந்தியாவிலேயே, 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஜிஎப்ஐ எல்.பி.ஜி. கிட்டை பொருத்தி ஹோமோலொகேஷன் சான்றிதழை கே.ஆர் பியூயல்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. உரிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சரியான கிட் பொருத் தப்பட்டால் வாகனங்களின் பாதுகாப்பும் அதன் திறனும் சிறப்பாக இருக்கும். மேலும், எரிபொருளுக்காக நாம் செலவிடும் தொகையும் கணிச மான அளவுக்கு குறையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x