Published : 05 Sep 2014 10:17 AM
Last Updated : 05 Sep 2014 10:17 AM
உலகின் மிகப்பெரிய ஆட்டோ மொபைல் சந்தையாக உருவெடுத்துள்ள இந்தியாவில் செகன்ட் ஹேண்ட் கார்களுக்கான வரவேற்பு சமீப காலமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளிலும் செகன்ட் ஹேண்ட் கார்களுக்கான சந்தை பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்காவில் இந்தாண்டு நிலவரப்படி புதிய கார் வாங்குவோர் மற்றும் செகன்ட் ஹேண்ட் வாங்கு வோருக்கு இடையேயான விகிதாச்சாரம் 1:2 என்கிற அளவில் உள்ளது. இதேபோல் இங்கிலாந்தில் 1:2.9 என்கிற அளவிலும், இந்தியாவில் 1:1.1 என்ற நிலையிலும் உள்ளது. இந்தியாவின் இந்த விகிதாச்சாரம் வரும் 2016-17-ல் 1:1.7 ஆக உயரக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் செகன்ட் ஹேண்ட் கார் வாங்கும் போது என்னென்ன விஷயங்களை கருத்தில் கொள்வது, அதிலுள்ள சவுகரிய அசவுகரியங்கள் என்னென்ன, வங்கிக்கடன் இ.எம்.ஐ வசதிகள் எப்படி என்று ஏராளமான கேள்விகள் எழக்கூடும்.
இந்த கேள்விகளுடன் லான்சர் டொயோடாவின் யு டிரஸ்ட் கார் விற்பனை மையத்தின் துணை பொதுமேலாளரான ஜி.செந்திலை சந்தித்தபோது அவர் கூறியதாவது: செகன்ட் ஹேண்ட் கார் வாங்குவது கவுரவக் குறைச்சல் என்று நினைத்த காலம் போய் இன்றைக்கு அந்த கார்களுக்கு உலகளவில் மிகப்பெரிய சந்தை உருவாகியுள்ளது. புதிதாக கார் ஓட்டி பழகுபவர்களில் நிறைய பேர் செகன்ட் ஹேண்ட் கார்களை விரும்புகிறார்கள். ஏனென்றால் அவற்றைக் கையாளுவது மிகவும் எளிது. மேலும் சென்னை போன்ற பெருநகரங்களில் பளபளவென ஒரு புதிய காரை பத்திரமாக மீண்டும் வீட்டிற்கு எடுத்து வருவது உத்திரவாதமில்லாத விஷயம். இந்த மாதிரியான விஷயங்கள் செகன்ட் ஹேண்ட் கார் களின் பக்கம் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்துள்ளது.
செகன்ட் ஹேண்ட் கார்களில் இன்னோவோ, எடியோஸ், லிவோ, கொராலா கார்களுக்கு பெரியளவில் வரவேற்புள்ளது. இது தவிர சிறிய ரக கார், எரிவாயு சிக்கனம் மிகுந்த கார் என்று வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்பவும் கார்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். புதிதாக ஒரு சிறிய ரக காரினை ரூ. 5 லட்சம் கொடுத்து வாங்குவதை விட அதே செலவில் கொஞ்சம் இடவசதி கொண்ட மீடியம் சைஸ் கார்களை செகன்ட் ஹேண்ட் சந்தையில் வாங்கிவிடலாம்.
அதேசமயம் சென்ட்ஹேண்ட் கார்களை வாங்குகிறபோது நிறைய விஷயங்களை கணக்கில் கொள்ள வேண்டும். இந்த கார்களை வாங்கும்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் போவது, அப்படியே தந்தாலும் போலியானதை தருவது, ஆற்றல் குறைந்த என்ஜின்களை பொருத்துவது என்று நிறைய மோசடி வேலைகள் நடக்கிறது.
எனவே சென்ட் ஹேண்ட் கார்களை நம்பகமான கார் தயாரிப்பு நிறுவனங்களின் செகன்ட் ஹேண்ட் விற்பனையகங்களில் வாங்கலாம். பெரிய நிறுவனங்களின் செகன்ட் ஹேண்ட் கார் விற்பனை மையங்களில் ஒரு காரை விற்பனை செய்வதற்கு முன்பாக என்ஜின் ஆற்றல், காரின் திறன், எரிவாயு சிக்கனம் என 203 சோதனைப்புள்ளிகள் கொண்டு சோதிக்கப்படுகிறது.
இதற்காக சான்றிதழ் மற்றும் வாரண்டியும் வழங்கப்படுகிறது. இதனால் வாங்கிய காரை வெளியில் விற்கிற போது எந்த பிரச்சினையும் வராது. எங்கள் மையத்தில் இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் வரை நாங்களே சர்வீஸ் செய்து தருகிறோம். சென்னையில் உள்ள எங்கள் மையத்தில் ஒரு காரினை வாங்கினால் இந்தியாவில் முழுவதும் உள்ள எங்களின் எந்த மையத்தில் வேண்டுமானாலும் அவற்றை சர்வீஸ் செய்து கொள்ளலாம்.
இதோடு விற்பனைக்கு வருகிற ஒரு கார் எத்தனை கிலோ மீட்டர் ஓடியிருக்கிறது? முறையாக சர்வீஸ் செய்யப்பட்டு வந்திருக்கிறதா என்பதையும் பொறியாளர்களை கொண்டு சோதித்த பின்னரே அவற்றை விற்பனை செய்கிறோம். முன்பெல்லாம் ஃபியட், அம்பாசிடர் கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட காலத்தில் செகன்ட் ஹேண்டில் ஒரு காரினை வாங்கினால் அதனை நேரே மெக்கானிக்கிடம் எடுத்து சென்று வாங்கிய விலைக்கு சரி பாதியளவு மேலும் செலவு செய்து அந்த காரை ரெடி செய்ய வேண்டியிருக்கும். ஆனால் தகுதியான மையங்களில் வாங்குகிற முதல் நாளிலிருந்தே காரை பயணத்திற்கு எடுத்து சென்றுவிடலாம்.
மேலும் வங்கிகளுடன் புரிந்துணர்வுகள் செய்து கொண்டுள்ள விற்பனை மையங்களில் கார்களை வாங்குகிறபோது, வாடிக்கையாளர்கள் சுலபத் தவணை (இ.எம்.ஐ.) அடிப்படையிலும் பணம் செலுத்தலாம்.
இதுதவிர ஒரு செகன்ட் ஹேண்ட் காரினை இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் அதன்பின்னர் அந்த காருக்கு அடுத்த நிலையில் உள்ள ஒரு மாடல்களை வாங்கியும் ஓட்டலாம். உதாரணத்துக்கு ஒருவர் ஆல்டோ காரினை இரண்டு ஆண்டு காலம் பயன்படுத்துகிறார் என்றால் அதன்பிறகு அவர் எடியோஸ் காருக்கு மாறிவிடலாம். இதன்பிறகு இன்னோவா என்று மாறலாம். இதை ‘Upgradation In Buying Cars’ என்று சொல் வர்கள். இதற்கென்று அப்கிரேடேஷன் மையங் களும் உண்டு என்கிறார் செந்தில்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT