Last Updated : 05 Jun, 2019 05:51 PM

 

Published : 05 Jun 2019 05:51 PM
Last Updated : 05 Jun 2019 05:51 PM

இந்தியப் புகையிலைத் தொழிற்துறை ரூ.11,79,498 கோடி மதிப்புடையது; 4.5 கோடி பேர் பணியில் உள்ளனர்: அசோசெம் ஆய்வுத் தகவல்

புகையிலை உற்பத்தித் தொழிற்துறையின் பொருளாதார பங்களிப்பு குறித்த சமீபத்திய ஆய்வையடுத்து அந்தத் துறை இந்தியப் பொருளாதாரத்தில் ரூ.11,79,498  கோடி பங்களிப்பு செய்கிறது, சுமார் 4.5 கோடிபேர் இந்தத் துறையில் வேலை செய்து வருகின்றனர் என்று தொழிற்துறைக் கூட்டமைப்பான அசோசெம் தெரிவித்துள்ளது.

 

அசோசெம் சார்பாக ‘தாட் ஆர்பிட்ரேஜ் ரிசர்ட் இன்ஸ்டிட்யூட்’ (TARI) நடத்திய இந்த ஆய்வில் இந்தத் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள அனைத்து அம்சங்களும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது, ஆனால் இதன் மூலம் ஏற்படும் ஆரோக்கியப் பிரச்சினைகள் பற்றி பேசவில்லை. ஆனால் இதனைச் சுற்றியுள்ள விவசாயத்துறை, புராசசிங் யூனிட்கள், போக்குவர்த்து, வர்த்தக பாதைகள், உற்பத்தி யூனிட்கள், பிராண்ட் உரிமையாளர்கள், ஏற்றுமதி ஆகிய பல துணை விஷயங்களையும் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு இந்திய பொருளாதாரத்தின் புகையிலையின் பங்களிப்பை ஆய்வு செய்துள்ளனர்.

 

“புகையிலைத்துறையை ஆய்வுக்குத் தேர்ந்தெடுக்கக் காரணம் இந்தத் துரை விவசாயம் முதல் உள்நாட்டு, அயல்நாட்டு சந்தைகள் வரை பரவியுள்ளது. அதன் மதிப்புச் சங்கிலித் தொடரில் பல்துறை வர்த்தகப் பயன்பாடுகள் கொண்ட துறையாக உள்ளது. இந்தியா முழுதும் சுமார் 4.5 கோடி பேர் இந்தத் துறையை நம்பி தங்கள் வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்” என்கிறது அசோசெம்

 

இந்தத் துரையில் சுமார் 60 லட்சம் விவசாயிகள் சுமார் 2 கோடி விவசாயக் கூலிகள், சுமார் 40 லட்சம் இலைபறிப்போர் தொழிலாளர்கள், சுமார் 85 லட்சம் பேர் புராசசிங், உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் துரையிலும் 72 லட்சம் பேர் சில்லறை விற்பனை மற்றும் வர்த்தகத்தில் உள்ளனர்.

 

இந்தியாவின் பணப்பயிர்களில் புகையிலை பெரிய அளவில் பங்களிப்பு செய்து வருகிறது, இதன் மூலம் பெரிய அளவில் சமூக-பொருளாதாரப் பயன்கள் இருந்து வருகிறது. அதாவது வேளாண் வேலைவாய்ப்பு, வேளாண் வருவாய், வருவாய் உற்பத்தி, மற்றும் அன்னியச் செலாவணி வருவாய் ஆகியவை இதில் அடங்குகிறது.

 

“புகையிலை ஏற்றுமதி மற்றும் புகையிலைப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா பெரிய அளவில் திகழ்ந்து வருகிறது என்பது தரவுகளின் அடிப்படையில் உண்மை. அரசுக்கு அன்னியச் செலாவணியாக ரூ.6000 கோடி ஆண்டுக்குக் கிடைத்து வருகிறது.

 

நிகர ஏற்ற்றுமதியில் உற்பத்தியில் இல்லாத புகையிலை ஏற்றுமதி மட்டும் ரூ.4,173 கோடி மீது ரூ.1830 கோடி சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பங்களிப்பு செய்து வருகிறது” என்கிறது இந்த ஆய்வறிக்கை.

 

உலக புகையிலை ஏற்றுமதி வர்த்தகம் 12 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றால் இந்தியா இதில் 5% பங்களிப்பு செய்கிறது என்கிறது அசோசெம் ஆய்வு. இந்தியப் புகையிலை சுமார் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது

 

மேலும் இந்த அறிக்கையில், “புகையிலை பயிரிடுதல் ஒரு அதி தீவிர உழைப்பைக் கோருவதாகும். ஆனால் மற்ற உணவுப்பயிர்களை விட இதில் வருமானம் அதிகம், அதிகம் சத்து இல்லாத மண்ணில் கூட புகையிலை விளையும், என்ன காலநிலை மாற்றம் நடந்தாலும் இது பாதிக்கப்படது. குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, குஜராத்தில் இது அதிகம் விளைகிறது.

 

இந்தியாவில் முதல் முறையாக புகையிலைத் துறை பொருளாதாரப் பங்களிப்பு அதன் எண்ணிக்கையுடன் ஆய்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x