Published : 24 Sep 2014 10:56 AM
Last Updated : 24 Sep 2014 10:56 AM
வங்கிப் பணியாளர்கள், அதிகாரிகளை தேவைப்பட்டால் மட்டுமே பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) குழு பரிந்துரை செய்துள்ளது. சுழற்சி அடிப்படையில் பணியிட மாறுதல் பொதுத்துறை வங்கிகளில் மேற்கொள்ளப்படுகிறது. இயந்திர கதியில் இதை மேற்கொள்ளாமல் தேவை அடிப்படையில் பணியிட மாறுதல் செய்யலாம் என அக்குழு சுட்டிக் காட்டியுள்ளது.
மிக முக்கியமான தேவையின் அடிப்படையில் குறிப்பிட்ட ஊழியரின் தலைமை அவசியம் தேவைப்படும்பட்சத்தில் பிராந்திய அடிப்படையில் மாறுதல் செய்யலாம். அந்த அளவுக்கு அந்த தலைமை பதவி முக்கியமானதாக இருக்க வேண்டும் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
வங்கிகள் மற்றும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் திறன் மேம்படுத்தும் குழு இத்தகைய பரிந்து ரையை அளித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் செயல் இயக்குநர் ஜி. கோபாலகிருஷ்ணா தலைமையிலான 10 பேரடங்கிய குழு இந்த பரிந்துரையை அளித்துள்ளது. முன்பு உள்ளதைப் போன்று 3 ஆண்டுகள் அல்லது குறிப்பிட்ட பொறுப்பில் உள்ளவர் களை சுழற்சி அடிப்படையில் மாற்றுவதை வங்கிகள் தவிர்க்க வேண்டும்.
வங்கிகள் மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலையில் உள்ளவர்கள் அத்துறையில் நிபுணத்துவம் பெறும் அளவுக்கு அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் தனியார் வங்கிகளுடன் போட்டியிடும் அளவுக்கு திறமையானவர்கள் உருவாவார்கள் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது. வங்கிகளில் தலைமைப் பண்புகளை வளர்ப் பதற்கு தலைமை கற்பித்தல் அதிகாரி (சிஎல்ஓ) என்ற பதவியை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள குழு, திறமையை வளர்ப்பதற்கு 6 அம்ச திட்டத்தையும் பரிந்துரைத்துள்ளது.
தொடக்க நிலையில் உள்ளவர் களுக்கு பயிற்சி அளிப்பது அவர்களது திறமையை மேம் படுத்துவது, உயர் பதவியில் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட மனிதவள மேம்பாட்டு நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிக்கை பரிந்துரைத்துள்ளது. தொடக்க நிலை ஊழியர்களுக்கு பொதுவான திறன் தேர்வு (சிஏடி) நடத்தலாம் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது. இத்தகைய தேர்வுகள் ஊழியர்களின் திறமையைப் பரிசோதிப்பதற்கு உதவும். இதேபோல தலைமைப் பண்புகளை சோதிக்கவும் தேர்வுகள் நடத்தலாம்.
திறமையானவர்கள் வங்கி களிலிருந்து வெளியேறினாலும் அதை ஈடுகட்டும் வகையில் வெளியிலிருந்து அல்லது வங்கி களுக்குள்ளேயே திறமையா னவர்களை பரிமாறிக் கொள்ளும் போக்கை ஊக்குவிக்கலாம் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரை தொடர்பான கருத்துகளை ஊழியர்கள் அக் டோபர் 31-ம் தேதிக்கு முன்பு அனுப்பினால் அதன் அடிப்ப டையில் விதிகளை உருவாக்க வசதியாக இருக்கும் என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT