Published : 30 Sep 2014 10:32 AM
Last Updated : 30 Sep 2014 10:32 AM
ஐந்து நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் அவற்றின் டி-மேட் கணக்குகளை முடக்கி அவற்றை பறிமுதல் செய்யுமாறு பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) உத்தரவிட்டுள்ளது. இந் நிறுவனங்களிடமிருந்து ரூ. 28 லட்சத்தை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரிஜ்லஷ்மி லீசிங் அண்ட் பைனான்ஸ் நிறுவனத் திடமிருந்து ரூ. 13.62 லட்சம், சவாகா கம்யூனிகேஷன் நிறுவனத்திடமிருந்து ரூ. 4.4 லட்சம் மற்றும் ஐஎப்எஸ்எல் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ. 3.05 லட்சத்தை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இது தவிர, அன்குர் சதுர்வேதியிடமருந்து ரூ. 6.30 லட்சத்தையும், மகேந்திர ஏ ஷா என்பவரிடமிருநு்து ரூ. 55,589 தொகையையும் பறிமுதல் செய்ய வேண்டியுள்ளது. மேலும் செலுத்த வேண்டிய அபராதத் தொகை மற்றும் அதற்குரிய வட்டி மேலும் பிற செலவினங்களையும் சேர்த்து வசூலிக்கவேண்டியுள்ளது.
இதேபோல என்எஸ்டிஎல் மற்றும் சிடிஎஸ்எல் ஆகியவற்றில் வைத்துள்ள கணக்குகள் மற்றும் தனி நபர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு செபி உத்தரவிட்டுள்ளது. வங்கிகள் மற்றும் டெபாசிட்டரிகள் தனது உத்தரவை பின்பற்றுமாறு செபி குறிப்பிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT