Last Updated : 17 Jan, 2019 03:26 PM

 

Published : 17 Jan 2019 03:26 PM
Last Updated : 17 Jan 2019 03:26 PM

இனி தைரியமாக ஃப்ரீ ட்ரயல் பண்ணலாம்!- ஆட்டோ பில்லிங் முறையில் வருகிறது மாற்றம் 

மாஸ்டர் கார்டுகள் வாயிலாக இலவச ஆஃபர்களைப் பயன்படுத்திப் பார்ப்பவர்களுக்கு சாதமாக ஆட்டோ பில்லிங் முறையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.

பணமில்லாp பரிவர்த்தனையில் எவ்வளவுக்கு எவ்வளவு நன்மைகள் இருக்கின்றனவோ அதே அளவுக்கு நடைமுறைச் சிக்கல்களும் இருக்கின்றன.

மாஸ்டர் கார்டு பயனாளிகள் சில நேரங்களில் ஃப்ரீ ட்ரயல் ஆஃபர்களைப் பயன்படுத்தும்போது அதற்கான காலக்கெடுவை மறந்துவிடுவர். 
குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் அந்தச் சேவையை வாடிக்கையாளர் பயன்படுத்தாவிட்டாலும்கூட ஆட்டோ பில்லிங் மூலம் பணம் வசூலிக்கப்படும். அன்சப்ஸ்க்ரைப் செய்ய மறந்த வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து பணம் போகும்போதுதான் உஷார் ஆவார்கள்.

இந்நிலையில், மாஸ்டர் கார்டு நிதி நிறுவனம் புதிய கொள்கையை வகுக்கிறது. இதன்படி, நீங்கள் ஏதாவது சேவைக்கு சப்ஸ்க்ரைப் செய்து அதை மறந்திருந்தாலும்கூட அதனைப் பயன்படுத்தி ஆட்டோ பில் முறையில் வர்த்தகர்கள் உங்களிடமிருந்து இனியும் பணம் வசூலிக்க முடியாது.

இனிமேல் ஃப்ரீ ட்ரயலுக்குப் பின்னர் பயன்படுத்தப்படும் சேவைக்கு வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிக்க நினைத்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் குறுந்தகவல் மூலமாகவோ அல்லது இமெயில் வாயிலாகவாவது அனுமதி பெற வேண்டும். 

அதுதவிர மாதந்தோறும் தங்கள் சேவைக்கான கட்டண நிர்ணயம் தொடர்பாகவும் அது தேவையில்லை என்றால் எப்படி அன்சப்ஸ்க்ரைப் செய்ய வேண்டும் என்பது குறித்தும் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x