Published : 15 Aug 2014 01:04 PM
Last Updated : 15 Aug 2014 01:04 PM

சென்னை லீக்: ஐசிஎப் உள்ளிட்ட அணிகளுக்கு ரூ.7.5 லட்சம் பரிசு

2014-ம் ஆண்டுக்கான சென்னை லீக் கால்பந்து போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற ஐசிஎப் உள்ளிட்ட அணிகளுக்கு ரூ.7.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டன.

சென்னை லீக் சீனியர் டிவிசன், முதல் டிவிசன், 2-வது டிவிசன், 3-வது டிவிசன், 4-வது டிவிசன் கால்பந்து போட்டிகள் கடந்த மார்ச் முதல் ஜூன் வரை சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்றன.

இதில் சீனியர் டிவிசன் லீக் போட்டியில் ஐசிஎப் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஏரோஸ் எப்சி அணி 2-வது இடம்பிடித்தது. முதல் டிவிசன் லீக்கில் ஸ்டார் ஜுவனைல் அணி முதலிடத்தையும், சென்னை கால்பந்து கிளப் அணி 2-வது இடத்தையும் பிடித்தன. 2-வது டிவிசனில் ஒய்.எம்.எஸ்.சி. அணி முதலிடத்தையும், எஸ்டிஎஸ் அணி 2-வது இடத்தையும் பிடித்தன.

3-வது டிவிசனில் சென்னை யுனைடெட் கால்பந்து கிளப் முதலிடத்தையும், திலக் மோதி அணி 2-வது இடத்தையும் பிடித்தன. 4-வது டிவிசன் லீக்கில் வி.எம்.கால்பந்து கிளப் அணி முதலிடத்தையும், மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யங்ஸ்டர்ஸ் அணி 2-வது இடத்தையும் பிடித்தன.

மேற்கண்ட போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற மற்றும் 2-வது இடத்தைப் பிடித்த அணிகளுக்கு கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை நேரு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. சீனியர் டிவிசனில் சாம்பியன் பட்டம் வென்ற ஐசிஎப் அணிக்கு ரூ.3 லட்சமும், 2-வது இடத்தைப் பிடித்த ஏரோஸ் எப்.சி. அணிக்கு ரூ.1.5 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன.

மற்ற பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கு தலா ரூ.50 ஆயிரமும், 2-வது இடத்தைப் பிடித்த அணிகளுக்கு தலா ரூ.25 ஆயிரமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன. சீனியர் டிவிசனில் அதிக கோலடித்த ஏரோஸ் எப்.சி. வீரர் மோர்கன் ஜஸ்டிஸுக்கு பத்திரிகையாளர் தன்வீர் நினைவாக ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு செயின்ட் ஜோசப் குழும நிர்வாக இயக்குநர் டாக்டர். பாபு மனோகரன் ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார். இந்தப் போட்டிக்கு செயின்ட் ஜோசப் குழுமம் ரூ.10 லட்சம் ஸ்பான்சர் செய்திருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x