Published : 28 Oct 2018 08:40 AM
Last Updated : 28 Oct 2018 08:40 AM

ஒரு கொலையும் அதை மறைக்க நடந்த நாடகமும்

தூதரகத்துக்கு வந்து உங்கள் கல்யாணத்துக்கு தேவை யான அனுமதி ஆவணங் களைப் பெற்றுக் கொள்ளலாம் என கஸோகியை துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகம் அழைத்தது. வந்தால் திரும்ப முடியாது எனத் தெரியாமல் கஸோகியும் வந்தார். கடைசியில் திரும்பாமலேயே இறந்துவிட்டார். அவர் மரணம் தொடர்பாக கடந்த அக்டோபர் 2-ம் தேதிமுதல் கடந்த 3 வாரங்களாக நம்ப முடியாத பல கதைகளைக் கூறிவிட்டது சவுதி அரசு. முதலில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் கஸோகி திரும்பி விட்டார் என்றது. அப்புறம் கை கலப்பு ஏற்பட்டதில் காயமடைந்து இறந்துவிட்டார் என்றது. கடைசி யில் அரசு நிர்வாகத்தை மதிக்காத சக்திகளால் கஸோகி கொல்லப் பட்டு விட்டார் என்று கொலையை ஒப்புக் கொண்டது.

ஆனால் பத்திரிகைகளிலும் அதிகார வட்டாரத்திலும் வேறு விதமான கருத்து வெளியானது. சவுதி மன்னர் குடும்பத்துக்கு நெருக்கமான நபர்களால், கஸோகியின் கொலை திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது என செய்தி வெளியானது. இந்தக் கொலையில் சவுதி இளவரசருக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. அப்படி தொடர்பு இருப்பது நிரூ பிக்கப்பட்டால் சர்வதேச ரீதியில் கண்டனமும் அரசாங்கம் மீது பல்வேறு பொருளாதாரத் தடை களும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தப் படுகொலையில் தொடர் புடைய பலரை சவுதி மன்னர் கைது செய்ய உத்தரவிட்ட பிறகும், பிரச் சினையின் தீவிரம் குறையவில்லை.

கொலையை ஒப்புக் கொண்ட தன் மூலம் முக்கியமான நடவடிக் கையை எடுத்துள்ளது சவுதி நிர்வாகம். இனி, இந்தக் கொலைக்கு காரணமானவர்கள் பற்றியும் அவர் களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்தும் தகவல் தெரிவிக்கும் என எதிர்பார்க்கலாம். கஸோகியை கொலை செய்ய யார் உத்தரவிட்டது என்பது முதல் யார் கொலை செய்தார்களோ அவர்கள் வரை அனைவரும் விசாரணைக்குள் கொண்டுவரப்பட வேண்டும். கஸோகியின் கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன என்பது முதல் கஸோகியின் உடல் எங்கிருக்கிறது என்பது வரை கண்டுபிடிப்போம் என துருக்கியின் அதிபர் ரேசெப் டையிப் எர்டோகன் நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார். கஸோகியின் சடலம் தொடர்பாக பலவிதமான கருத்துகள் வெளியாகியுள்ளன. கஸோகியின் உடல் பல துண்டு களாக வெட்டப்பட்டு பெட்டிகளில் அடைக்கப்பட்டு சவுதி அரேபியா கொண்டு செல்லப்பட்டது என்றும் இல்லையில்லை.. இஸ்தான்புல் சவுதி தூதரகத்தின் தோட்டத்தில் சடலம் புதைக்கப்பட்டது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளில் பொறுப்பான நாடாக கருதப்படும் சவுதி அரேபியாவின் பெயர் இந்தக் கொலையால் கெட்டுவிட்டது. குறிப்பாக சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் மேல் சந்தேகம் திரும்பியுள்ளது. சீர் திருத்தவாதியாகக் கருதப்படும் சல்மான், அதிருப்தியாளர்கள் மீது இரக்கமில்லாமல் நடந்து கொள் வார் எனக் கூறப்படுகிறது. சவுதி இளவரசரின் ஒப்புதல் இல்லாமல் கஸோகி கொலை நடந்திருக்காது என்கிறார்கள் பலர். ஆனால் அதை சவுதி அரசு மறுத்துள்ளது. ஆனால், இந்தக் கொலை தொடர்பாக வெளியாகி வரும் பல்வேறு மாறு பட்ட கருத்துகளால் சவுதி நிர்வாகத் தின் நம்பகத்தன்மை கேள்விக் குறியதாகி விட்டது. இந்தக் கொலை யால் சவுதி அரசு மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இப் போது அனைவரின் கவனமும் அமெரிக்கா மீதும் ட்ரம்ப் நிர்வாகம் மீதும் திரும்பியுள்ளது. கைகலப்பு தான் கொலையில் முடிந்ததாக சவுதி அரசு சொன்னதை நம்பிய ட்ரம்ப், துருக்கி அதிபர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்களால், பொய் சொல்லி அமெரிக்காவை ஏமாற்ற முயல்வதாக நட்பு நாடான சவுதி மீது குற்றம் சாட்டினார். பொருளா தார தடைகள் விதித்தால் அது, சவுதியை விட அமெரிக்க நிறுவனங் களையும் வேலை வாய்ப்பையும் அதிகம் பாதிக்கும் என்பதால் தடைகளைக் கொண்டு வர ட்ரம்புக் கும் விருப்பமில்லை. இதை அவரே வெளிப்படையாக கூறியிருக்கிறார். ஈரான் மீது அடுத்த கட்ட பொருளா தார தடைகள் நவம்பரில் அம லாகும் சூழலில், சவுதியிடம் கடுமை யாக நடப்பதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தடை விதித்தால் அமெரிக்கா மட்டுமல்ல, சவுதிக்கு ஆயுதங்கள் விநியோகம் செய்யும் அத்தனை ஐரோப்பிய நாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகும். ஆனால் தண்டிக்கும் விஷயத்தைத் தாண்டி, கஸோகி தூதரக வளாகத்திலேயே படுகொலை செய்யப்பட்டிருப்பது, சர்வதேச அமைப்புகள் உறுதி அளித் துள்ள தூதரக சிறப்புச் சலுகை கள் குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x