Published : 30 Aug 2014 12:00 AM
Last Updated : 30 Aug 2014 12:00 AM

மோசடி நிறுவனங்கள் மீது நடவடிக்கை: செபி தலைவர் யு.கே. சின்ஹா எச்சரிக்கை

பொதுமக்களை ஏமாற்றி நிதி திரட்டும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பங்கு பரிவர்த்தனை வாரியத் தலைவர் யு.கே. சின்ஹா எச்சரித்துள்ளார்.

கடன் கூட்டுறவு சங்கங்கள் என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து நிதிதிரட்டும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களிடமிருந்து திரட்டும் நிதியின் அளவு ரூ. 100 கோடிக்கு மேல் செல்லக்கூடாது. அவ்விதம் கூடுதலாக நிதி திரட்டும் நிறுவனங்கள் முன்னதாகவே செபி-யிடம் அனுமதி பெற்றாக வேண்டும். ஆனால் மோசடி நிறுவனங்கள் எவ்வித அனுமதியும் பெறாமல் தவறான வாக்குறுதிகளை அளித்து மக்களிடம் நிதி திரட்டி ஏமாற்றி விடுகின்றன. கடன் கூட்டுறவு நிறுவனங்கள், சிட் பண்டுகள் மற்றும் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் (என்பிஎப்சி) ஆகியன சிலவும் விதிமுறைகளை மீறுகின்றன என்று சின்ஹா சுட்டிக் காட்டினார்.

ஒரு தொழில் குழுமத்தைச் சேர்ந்த அந்த நிறுவனம் முன்பு ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. விதிமுறைகளை மீறி அந்நிறுவனம் செயல்படுவதைக் கண்டு ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்தபோது, அந்நிறுவனம் கார்ப்பரேட் விவகார அமைச்ச கத்தின் கீழ் வருவதாகக் கூறியது. ஆனால் அது செபி-யின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதாக நாங்கள் கருதினோம். இதைத் தொடர்ந்து அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்தபோது அது கூட்டுறவு சங்க நிதி என பிரகடப்படுத்தியது. இன்னமும் இதுபோன்ற நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

செபி எடுக்கும் நடவடிக்கை களால் இதுபோன்ற நிறுவன ங்களை முற்றிலுமாக ஒழித்து விட்டதாகக் கூற முடியாது.

ரூ. 100 கோடிக்கு மேல் முறைகேடாக நிதி திரட்டிய நிறுவனங்கள் மீது செபி நடவடிக்கை எடுக்கும்போது, அந்நிறுவனத்துக்கு ஆதரவாக பொதுமக்களே திரண்டு வருகி ன்றனர். பொதுவாக இதுபோன்ற நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதே சந்தர்ப்பம் மற்றும் சாட்சிகளின் அடிப்படை யில்தான். பொதுமக்களே தடுக்கும் நிலைமையும் சில சூழல்களில் ஏற்படுவதுண்டு.

சமீபத்தில் செபி-க்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வகை செய்யும் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அத்துடன் இதுபோன்ற வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நிதி மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில் செபி-க்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வகை செய்யும் சட்டம் நிறைவேறியுள்ளது வரவே ற்கத்தக்கதே.

கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டம் அமலுக்கு வரும் முன்பே ரூ. 1 லட்சம் கோடிக்கு மேலான நிதி திரட்டும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

கூட்டுறவு சங்கங்கள் தங்களது உறுப்பினர்களிடமிருந்து நிதி திரட்டலாமே தவிர பொதுமக்க ளிடமிருந்து நிதி திரட்டக் கூடாது என்றார். சிட்பண்ட், கூட்டுறவு சங்கம், நிதி பண்ட், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், பரஸ்பர நிதியம், ஓய்வூதிய நிதியம், காப்பீட்டு நிதியம் ஆகியன செபி கட்டுப்பாட்டில் வராது என்று சின்ஹா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x