Published : 22 Apr 2014 11:00 AM
Last Updated : 22 Apr 2014 11:00 AM
அமுல் விளம்பரத்தில் வரும் சிறுமி மிகவும் பிரபலம். வெள்ளை நிறத்தில் சிவப்பு புள்ளி போட்ட ஸ்கர்ட், அதற்கேற்றபடி தலையில் ரிப்பன் கட்டிய சிறுமியின் விளம்பரம் நிச்சயம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும்.
அன்றாட செய்திகளின் அடிப்படையில் இந்நிறுவன விளம்பர வாசகம் இருக்கும். இதனாலேயே அடிக்கடி மாற்றப்படும் இந்த விளம்பரம் மிகவும் பிரபலம்.
சமீபத்தில் சஹாரா நிறுவனம் குறித்து இந்நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. சஹாரா நிறுவனத் தலைவரை சிறையிலிருந்து மீட்பதற்காக ஊழியர்கள் தலா ரூ. 1 லட்சம் திரட்டப் போவதாக செய்தி வெளியானது. இதை விமர்சித்து அந்நிறுவன ஊழியர்கள் நிதி திரட்ட பிச்சை எடுப்பது போன்ற படமும், வாசகமும் வெளியிடப்பட்டிருந்தது.
இதைக் கண்டித்து சஹாரா நிறுவனம் குஜராத் கூட்டுறவு சங்கத்துக்கு (ஜிசிஎம்எம்எப்) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் எத்தகைய இழப்பீடும் கோரவில்லை. சஹாரா குழுமத்திடமிருந்து நோட்டீஸ் வந்துள்ளாகவும், இதற்கு பதிலளிக்கும்படி தங்கள் நிறுவன சட்டப் பிரிவுக்கு பரிந்துரைத்துள்ளதாக ஜிசிஎம் எம்எப் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ். சோதி கூறியுள்ளார்.
அமுல் நிறுவனம் ஒருபோதும் உள்நோக்கத்தோடும் விளம்பரங்களை வெளியிடுவதில்லை. இந்த விளம்பரங்கள் அனைத்துமே நகைச்சுவை உணர்வு கலந்த கிண்டல் வாசகங்கள்தான் என்றும் கூறியுள்ளார். 2012-ம் ஆண்டில்தான் அமுல் நிறுவனம் தனது 50-ம் ஆண்டு விழாவைக் கொண்டாடியது. அப்போது மிகச் சிறந்த கிண்டல் விளம்பரங்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT