Published : 06 Apr 2025 12:41 AM
Last Updated : 06 Apr 2025 12:41 AM
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480-க்கு விற்பனையானது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தங்கம் விலை கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு பவுன் ரூ.63,120-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்து ரூ.64,440-க்கு விற்பனையானது. பிறகு, மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த 3-ம் தேதியன்று ஒரு பவுன் ரூ.68,480க்கு அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்தது.
இந்நிலையில், தங்கம் விலை கடந்த 2 நாட்களாக குறைந்து விற்பனையாகி வருகிறது. இதன்படி, நேற்று முன்தினம் ஒரு பவுனுக்கு ரூ.1,280 விலை குறைந்த நிலையில், 2-வது நாளாக நேற்றும் தங்கம் விலை குறைந்தது. நேற்று ஒரு கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் ரூ.8,310-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480-க்கும் விற்பனையானது. இதன்மூலம், கடந்த 2 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்துள்ளது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ரூ.72,520-க்கு விற்பனையானது.
வெள்ளி விலை குறைந்தது: வெள்ளி விலை நேற்று ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.103-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.1,03,000 ஆக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment