Published : 03 Jan 2025 05:14 AM
Last Updated : 03 Jan 2025 05:14 AM

சென்னையில் சின்ன வெங்​காயம் விலை திடீர் உயர்வு

சென்னை: சின்ன வெங்​காயம் விலை சென்னை​யில் திடீரென உயர்ந்​த​தால் மக்கள் சிரமத்​துக்கு ஆளாகி​யுள்​ளனர். சென்னை​யில் கடந்த மாதம் பெரிய வெங்காய விலை அதிக​மாக​வும் சின்ன வெங்காய விலை குறைவாக​வும் இருந்​தது.

அண்மை​யில் பெய்த கனமழை​யால் தமிழகத்​தில் பெரம்​பலூர், திருப்​பூர், திண்​டுக்கல் மாவட்​டங்​களில் அதிகள​வில் சாகுபடி செய்​யப்​பட்ட சின்ன வெங்​காயம் அழுகிய​தால் விளைச்சல் பாதித்​தது. அதனால் சந்தைக்கு வரத்து குறைந்​தது. அதைத் தொடர்ந்து தற்போது விலை உயர்ந்து வருகிறது.சின்ன வெங்​காயம் நேற்று கிலோவுக்கு ரூ.80 முதல் ரூ.100 வரை விற்​றது.

இதுகுறித்து தோட்​டக்​கலைத் துறை அதிகாரிகள் கூறிய​தாவது: தமிழகத்​துக்​குத் தேவையான சின்ன வெங்​காயம் நமது மாநிலத்​திலேயே விளை​கிறது. ஆண்டு​தோறும் அக்டோபர், நவம்பர் மாதங்​களில் சின்ன வெங்​காயம் சாகுபடி நடைபெறும். டிசம்பர் முதல் மார்ச் வரை அறுவடை நடைபெறும்.

எந்த ஆண்டில் பருவமழை அதிகமாக இருக்​கிறதோ அந்த ஆண்டு சின்ன வெங்​காயம் அழுகல் அதிகம் ஏற்பட்டு, சந்தைக்கு வரத்து குறை​யும். அதனால் விலை உயர்​வும் ஏற்படும். அதுபோலவே தற்போது சின்ன வெங்காய விலை உயர்ந்​துள்ளது. அடுத்த 10 நாட்​களில் சின்ன வெங்​கா​யம் ​விலை குறை​யும். இவ்​வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x