Published : 27 Dec 2024 02:55 PM
Last Updated : 27 Dec 2024 02:55 PM

சுசுகி மோட்டார்ஸின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசுகி மறைவு

ஒசாமு சுசுகி | கோப்புப்படம்

டோக்கியோ: சுசுகி மோட்டார்ஸின் முன்னாள் தலைவரும், அந்நிறுவனத்தின் உலகளாவிய உந்து சக்தியுமான ஒசாமு சுசுகி காலமானார். அவருக்கு வயது 94. லிம்போமா நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் டிசம்பர் 25ம் தேதி உயிரிழந்தாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 1930-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் தேதி ஜப்பானின் கெய்ரோவில் பிறந்த ஒசாமு மட்சுடா, சுசுகி நிறுவனத்தை உருவாக்கியவர்களின் குடும்பத்துடன் திருமணம் செய்தபின்பு, 1958-ம் ஆண்டு ஆட்டோமேக்கராக அதில் இணைந்தார். பின்பு தனது மனைவியின் குடும்ப பெயரை எடுத்துக்கொண்ட ஒசாமு, அதன்பின்பு சிறிய கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சுசுகி ஒரு குடும்ப பெயராக மாறும் வியத்தகு மாற்றத்துக்கான தனது பயணத்தைத் தொடங்கினார்.

ஒசாமு சுசுகி, அந்நிறுவனத்தை 40 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தினார். இந்த காலகட்டத்தில் இரண்டு முறை தலைவராக இருந்தது உட்பட பல தசாப்தங்கள் நிறுவனத்தை வழிநடத்தியது, அவரை உலக வான உற்பத்தியாள தலைவராக நீண்ட காலம் பணி செய்ய வைத்தது. அவரது தலைமையின் கீழ் சுசுகி மோட்டார்ஸ், ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் வோல்வாகன் ஆகியவைகளுடன் கூட்டாண்மையை உருவாக்கியது. இந்தக் கூட்டாண்மை வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா வரை சுசுகி நிறுவனத்தை தடம்பதிக்கச் செய்தது.

தனது தைரியமான முடிவால் கடந்த 1980களில் சுசுகி இந்திய சந்தைக்குள் நுழைந்தார். கடந்த 1982-ம் ஆண்டு இந்திய அரசாங்கத்துடன் சுசுகி நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் மாருதி உத்யோக் உருவானது. இந்தக் கூட்டணி மாருதி 800 என்ற சிறிய காரை அறிமுகப்படுத்தியது. அந்தக் கார் உடனடியாக வெற்றி பெற்ற அதேநேரத்தில், இந்தியச் சந்தையில் சுசுகியின் ஆதிக்கத்தையும் உறுதிப்படுத்தியது.

இன்று மாருதி சுசுகி, இந்தியாவின் பெரிய கார் உற்பத்தியாளராக உள்ளது. நிறுவனத்தின் உலகளாவிய விற்பனையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகிறது.

ஒசாமு சுசுகியின் பதவி காலம் மலர்பாதையாக இருக்க வில்லை. அவர் ஜப்பானின் எரிபொருள் பொருளாதார சோதனை ஊழலை சந்தித்தார். இது அவரை நிறுவனத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதற்கு வழிவகுத்தது. என்றாலும் கூட நிறுவனத்தின் மறுமலர்ச்சி மற்றும் வளர்ச்சியில் அவரின் அர்ப்பணிப்பு மாறாமல் இருந்தது.

பிற்காலத்தில் கூட சுசுகி நிறுவனத்தின் ஆலோசகராக இருந்து வாகன உற்பத்தி உலகில் புதுமையான பாரம்பரியம் மற்றும் வாகன சந்தை தலைமையை விட்டுச்சென்றுள்ளார். உலக தொழில்துறையில் அவராற்றிய பங்களிப்பும், சுசுகி நிறுவனத்தின் உலகளாவிய இருப்பை உறுதிப்படுத்துவதில் அவரின் தலைமை ஈடிணையில்லாதவை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x