ஏஐ பயன்பாட்டில் நெறிமுறைகளை வகுக்க 8 பேர் அடங்கிய குழுவை அமைத்தது ரிசர்வ் வங்கி

ஏஐ பயன்பாட்டில் நெறிமுறைகளை வகுக்க 8 பேர் அடங்கிய குழுவை அமைத்தது ரிசர்வ் வங்கி

Published on

நிதித் துறையில் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) பயன்பாட்டை நெறிப்படுத்தும் வகையில் கொள்கைகளை வகுக்க 8 பேர் அடங்கிய குழுவை ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.

ஐஐடி பாம்பே பேராசிரியர் புஷ்பக் பட்டாச்சார்யா (கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை ) தலைமையில் செயல்படும் இந்த குழுவில் தேப்ஜானி கோஷ் ( ரிசர்வ் வங்கி இன்னோவெஷன் ஹப்), பலராமன் ரவீந்திரன் (வத்வானி ஸ்கூல் ஆப் டேட்டா சயின்ஸ்), அபிஷேக் சிங் (எம்இஐடி), ராகுல் மத்தகன், அஞ்சனி ரத்தோர் (எச்டிஎப்சி வங்கி), ஸ்ரீ ஹரி நகரலு (மைக்ரோசாப்ட்) மற்றும் சுவேந்து பட்டி (ஆர்பிஐ, பின்டெக்) ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

உலகளவில் நிதித்துறையில் ஏஐ-யின் செயல்பாட்டை இக்குழு மதிப்பாய்வு செய்து ஆறு மாதங்களுக்குள் இக்குழு அறிக்கையை தாக்கல் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in