Published : 26 Dec 2024 12:35 PM
Last Updated : 26 Dec 2024 12:35 PM

ஐஆர்சிடிசி வலைதளம் முடக்கம்: தட்கல், இ-டிக்கெட் சேவைகள் பாதிப்பு

கோப்புப்படம்

சென்னை: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷனின் (ஐஆர்சிடிசி) வலைதளம் தற்காலிகமாக முடங்கிய காரணத்தால் ரயில் பயணிகள் தட்கல் மற்றும் இ-டிக்கெட் எடுக்க முடியாமல் தவித்தனர்.

இதனால் அந்த தளத்தை பயன்படுத்த முயன்ற இணையதள பயனர்களுக்கு ‘திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணி காரணமாக இ-டிக்கெட்டிங் சேவை தற்காலிகமாக பெற முடியாத சூழல் உள்ளது. மீண்டும் பின்னர் முயற்சிக்கவும்’ என்ற மெசேஜ் திரையில் தெரிகிறது. இருப்பினும் இந்த பராமரிப்பு குறித்து ஐஆர்சிடிசி தரப்பில் எந்த அப்டேட்டும் வழங்கப்படவில்லை. அதன் சமூக வலைதள பக்கங்களிலும் இது குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை.

பயணிகள் தங்களது ரயில் டிக்கெட் சார்ந்த சந்தேகங்களுக்கு 14646, 080-44647999, 080-35734999 ஆகிய கஸ்டமர் கேர் எண்கள் அல்லது etickets@irctc.co.in என்று மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வலைதள சேவை முடக்கம் குறித்து நிகழ் நேரத்தில் தகவல் தெரிவிக்கும் டவுன் டிடெக்டரில் ஆயிர கணக்கான பயனர்கள் ஐஆர்சிடிசி தளம் முடக்கம் குறித்து தெரிவித்துள்ளனர். அதில் 56 சதவீதம் பேர் வலைதளம் முடக்கம் குறித்தும், 30 சதவீதம் பேர் மொபைல் செயலியை பயன்படுத்த முடியவில்லை என்பது குறித்தும், 14 சதவீதம் பேர் டிக்கெட் பதிவு செய்ய முடியவில்லை என்பது குறித்தும் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x