Published : 18 Dec 2024 09:43 PM
Last Updated : 18 Dec 2024 09:43 PM

உரிமை கோரப்படாத ரூ.880 கோடி: எல்ஐசி பாலிசி கிளைம்களை சரிபார்ப்பது எப்படி?

கோப்புப்படம்

மும்பை: இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (எல்ஐசி) பாலிசி முதிர்வு பெற்றும் அதற்கான தொகையை பாலிசிதாரர்கள் உரிமை கோராமல் இருப்பதாக மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

2023-24 நிதி ஆண்டில் மட்டும் 3.72 லட்சம் பாலிசிதாரர்கள் முதிர்வு பெற்ற தங்கள் பாலிசிக்கான உரிமை தொகையை கோராமல் உள்ளனர். இதன் மதிப்பு மட்டுமே ரூ.880 கோடி என தகவல்.

கடந்த மார்ச் மாத நிலவரப்படி இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) சொத்து மதிப்பு ரூ.50 லட்சம் கோடியை கடந்தது. கடந்த 1956-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனமான இது, ஆயுள் காப்பீட்டு சேவையில் ஈடுபட்டு வருகிறது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இது நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக விளங்குகிறது.

உரிமை கோரப்படாத எல்ஐசி பாலிசி கிளைம்களை சரிபார்ப்பது எப்படி?

  • எல்ஐசி-யின் https://licindia.in/home என்று தளத்துக்கு பாலிசிதாரர்கள் செல்ல வேண்டும்
  • அதில் வாடிக்கையாளர் சேவை பிரிவுக்கு சென்று ‘Unclaimed Amounts of Policy Holders’-னை தேர்வு செய்ய வேண்டும்
  • அதில் பாலிசி எண், பாலிசிதாரரின் பெயர், பிறந்த தேதி மற்றும் பான் கார்ட் விவரங்களை உள்ளிட்ட வேண்டும்
  • பின்னர் ‘சப்மிட்’ கொடுத்து பாலிசி கிளைம் சார்ந்த விவரங்களை சரி பார்க்கலாம்

உரிமை கோரப்படாத தொகை என்ன ஆகும்? - 10 ஆண்டுகளுக்கு மேல் முதிர்வு பெற்றும் உரிமை கோரப்படாமல் உள்ள பாலிசி தொகை மூத்த குடிமக்கள் நல நிதிக்கு மாற்றப்படும் என தகவல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x