Last Updated : 03 Dec, 2024 07:03 PM

 

Published : 03 Dec 2024 07:03 PM
Last Updated : 03 Dec 2024 07:03 PM

தமிழகத்தில் டிச.5-ல் சார்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் விநியோகம்

சென்னை: கார்த்திகை மாத முகூர்த்த தினத்தில் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதை கருத்தில் கொண்டு, டிச.5-ம் தேதி பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 'சுபமுகூர்த்த தினங்களில், அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்று, பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று பதிவுக்கான கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். தற்போது கார்த்திகை மாதத்தின் சுபமுகூர்த்த தினமான டிச.5-ம் தேதி அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கும்படி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இதை ஏற்று, கார்த்திகை மாதத்தின் சுபமுகூர்த்த தினமான டிச.5ம் தேதி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதில் 150 டோக்கன்கள், 2 சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதில் 300 டோக்கன்கள், அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுககு 100க்கு பதில் 150 சாதாரண டோக்கன்கள் மற்றும் ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்படும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x