Published : 27 Nov 2024 04:22 PM
Last Updated : 27 Nov 2024 04:22 PM
சென்னை: இந்திய தொழிலதிபர்கள் ரியல் எஸ்டேட் மற்றும் ஆடம்பர பொருட்கள் சார்ந்து அதிகம் செலவிடுவதாக ஹெச்எஸ்பிசி ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இது உலக நாடுகளை சேர்ந்த தொழிலதிபர்கள் செலவிடும் சராசரி விகிதத்தை காட்டிலும் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச்எஸ்பிசி-யின் சர்வதேச ஆன்ட்ரபிரனரியல் வெல்த் ரிப்போர்ட் 2024-ம் ஆண்டு ஆய்வறிக்கையின் மூலம் இந்திய தொழிலதிபர்களின் வாழ்க்கை முறை மற்றும் முதலீடு சார்ந்த பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் இதில் குறிப்பிடத்தக்கது. 10-ல் 6 இந்திய தொழிலதிபர்கள் தங்கள் வசம் உள்ள நிதியை ரியல் எஸ்டேட் சார்ந்த முதலீடுகளுக்கு ஒதுக்குகின்றனர். குறிப்பாக சொத்துகள் அதிகம் கொண்டுள்ள தொழிலதிபர்கள், பங்குகள், பத்திரங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் சார்ந்த முதலீடுகளில் கவனம் செலுத்துவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கலைப் பொருட்கள் சேகரிப்பு சார்ந்து இந்திய தொழிலதிபர்கள் செலவிடுவது மிகவும் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாங்கள் மேற்கொண்டு வரும் தொழில் சார்ந்த வாய்ப்புகள் வளரும் என நேர்மறையான நம்பிக்கையை இந்திய தொழிலதிபர்கள் கொண்டுள்ளதாக ஹெச்எஸ்பிசி ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT