Published : 13 Nov 2024 03:54 AM
Last Updated : 13 Nov 2024 03:54 AM

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,080 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.56,680-க்கு விற்பனையானது. இதனால், நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. பின்னர் படிப்படியாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த மாதம் 25-ம் தேதி பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.56,480-க்கும் விற்பனையானது.

பின்னர், இம்மாதம் 17-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.57,280-க்கும், 19-ம் தேதி பவுன் ரூ.58,240-க்கும், 21-ம் தேதி பவுன் ரூ.58,400-க்கும், 23-ம் தேதியன்று ஒரு பவுன் ரூ.58,720-க்கும் அதிகரித்தது. தீபாவளிக்கு முந்தைய தினமான அக்.30-ம் தேதி பவுன் ரூ.59,520-க்கும் அதிகரித்து வரலாற்று உச்சத்தை எட்டியது. பின்னர், தங்கம் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்நிலையில், தங்கம் விலை நேற்றும் குறைந்தது.

இதன்படி, தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.135 குறைந்து ரூ.7,085-க்கும், பவுனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.56,680-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ரூ.60,720-க்கு விற்பனையானது. தங்கம் விலை குறைந்து வருவதைக் கண்டு நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கிராம் வெள்ளி ரூ.100-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.1,00,000 ஆக இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x