Published : 03 Nov 2024 11:34 AM
Last Updated : 03 Nov 2024 11:34 AM
சென்னை: சென்னை ஒரகடத்தில் 127 ஏக்கரில் ரூ.2,858 கோடியில் உலகளாவிய மையம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி செயிண்ட் கோபைன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் செயிண்ட் கோபைன் நிறுவனம், தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர், பெருந்துறை, திருவள்ளூர் ஆகிய இடங்களில் தொழில் திட்டங்களை நிறுவி ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் தலைவர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தபோது, சென்னை ஒரகடம் சிப்காட் பகுதியில் 127 ஏக்கர் பரப்பளவில் ரூ.2,858 கோடி மதிப்பீட்டில் ‘உலகளாவிய மையம்’ அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், அந்த மையம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதிக்க கோரி செயிண்ட் கோபைன் நிறுவனம் விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த உலகளாவிய மையம் அமைந்தால் 1,110 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், இந்த உலகளாவிய மையத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT