Published : 02 Nov 2024 02:56 AM
Last Updated : 02 Nov 2024 02:56 AM

கடந்த ஆண்டு தீபாவளி முதல் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.128 லட்சம் கோடி லாபம்

மும்பை: கடந்த ஆண்டு தீபாவளி முதல் நடப்பு ஆண்டு தீபவாளி வரையிலான ஓராண்டில் இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ரூ.128 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளனர். இதனால், அவர்கள் வசமுள்ள பங்கு மதிப்பு ரூ.453 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை, வலுவான பொருளாதார செயல்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக கடந்த ஓராண்டில் பங்குச் சந்தை நல்ல ஏற்றம் கண்டது. குறிப்பாக, பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு பங்குச் சந்தை புதிய உச்சம் தொட ஆரம்பித்தது என்று பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்பட்டது. இவ்வாண்டு அக்டோபர் 31 அன்று கொண்டாடப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் இஸ்ரேல் - காஸா, ரஷ்யா - உக்ரைன் போர் என சர்வதேச அரசியலில் நெருக்கடி சூழல் காணப்பட்ட போதிலும் இந்திய பங்குச் சந்தை கணிசமான அளவில் ஏற்றம் கண்டது.

கடந்த ஆண்டு தீபாவளியில் சென்செக்ஸ் 65,259 ஆக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு தீபாவளியில் அது 73,389 ஆக உயர்ந்தது. இந்நிலையில் கடந்த ஓராண்டில் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.128 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளது. அதிகபட்சமாக எம் அண்ட் எம் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 79%, பார்தி ஏர்டெல் 72%, அதானி போர்ட்ஸ் 70% அளவில் ஏற்றம் கண்டது. அதேபோல் இன்டஸ்இண்ட் 30%, பஜாஜ் பின்சர்வ் 8%, நெஸ்லே 7% என்ற அளவில் சரிந்தது. கடந்த ஓராண்டில் தங்கத்தின் மூலமான லாபம் 33 சதவீதமாகவும், வெள்ளி மூலமான லாபம் 33 சதவீதமாகவும் உள்ளது. அதிகபட்சமாக பிட்காயின் மூலமான லாபம் 72 சதவீதமாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x