Published : 01 Nov 2024 03:38 PM
Last Updated : 01 Nov 2024 03:38 PM
சென்னை: ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான கால வரம்பு 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கால வரம்பு இன்று (நவம்பர் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான இந்த புதிய கால வரம்பு ரயில் மூலம் பயணிக்க திட்டமிடும் பயணிகளுக்கு சரியான வகையில் உதவும் என ரயில்வே அமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் பழைய கால வரம்பின் கீழ் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளில் (61 டு 120 நாட்கள்) 21 சதவீதம் ரத்து செய்யப்படுவதாகவும், 5 சதவீத பயணர்கள் பயணிப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறையின் கீழ் ரயில் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் பலன் அடைவார்கள் என அமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு கால வரம்பு: கவனத்தில் கொள்ள வேண்டியவை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT