Published : 02 Oct 2024 10:22 AM
Last Updated : 02 Oct 2024 10:22 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்வு: ஒரு பவுன் ரூ.56,800-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் இன்று (புதன்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.56,800-க்கு விற்பனையாகிறது.

நேற்றைய தினம் தங்கம் பவுனுக்கு ரூ.240 என விலை குறைந்திருந்த நிலையில் இன்று ஏற்றம் கண்டுள்ளது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

அந்த வகையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.56,800-க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,100-க்கு விற்பனையாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x