Published : 20 Sep 2024 06:06 AM
Last Updated : 20 Sep 2024 06:06 AM
சென்னை: அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஆண்டுதோறும் பண்டிகைக் காலங்களில் தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இதற்கு அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் (amazon great Indian festival) எனப் பெயரிட்டுள்ளது. இந்த ஆண்டு செப்.27 முதல் இந்த தள்ளுபடி விற்பனை திருவிழா தொடங்குகிறது. அதற்கு முன்னோட்டமாக அமேசான் ஃபெஸ்டிவ் பாக்ஸ் என்ற பிரச்சாரத்தை தமிழகத்திலுள்ள முக்கிய நகரங்களிலும் நடத்தியது.
இது தொடர்பாக அமேசான் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் இயக்குநர் ரஞ்சித் பாபு கூறியதாவது: நுகர்வோர் பெரும்பாலும் பயன்படுத்தும் எலக்ட்ரானிக்பொருட்கள் விற்பனை தமிழகத்தில் நம்பகமான வர்த்த கத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய வகை மற்றும் தரமான எலக்ட்ரானிக் பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஏசி, பிரிட்ஜ், ஹெட்போன், கம்ப்யூட்டர், ஸ்மார்ட்வாட்ச், டிவி ஆகிய பொருட்களுக்கான தேவை இந்த விழாக்கால சலுகையில் அதிகமாகக் காணப்பட்டது. சென்னையில் உள்ள வாடிக்கையாளர்கள் ரூ.20 ஆயிரத்துக்கும் மேலான செல்போன்களை வாங்க விரும்புகின்றனர். அமேசான் ஆன்லைன் வர்த்தகத்தின் வளர்ச்சிக்கு சென்னை ஒரு முக்கிய வியாபார மையமாகத் திகழ்கிறது.
எங்கள் நிறுவனமானது சிறிய நிறுவனங்கள், புதியகண்டுபிடிப்புகள் ஆகியவற் றுக்கு முக்கியத்துவம் அளித்து தொடர்ந்து ஊக்கப்படுத்தும். அண்மையில் ஒரு தனியார் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தியஆய்வில் அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனமானது, பொருட்கள் வாங்குவதற்கு அதிகமானோரின் விருப்ப தளமாக இருப்பதோடு, 73 சதவீதநம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனமாகவும் திகழ்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT