Published : 19 Sep 2024 11:02 AM
Last Updated : 19 Sep 2024 11:02 AM
சென்னை: சென்னையில் தங்கம் விலை ரூ.200 குறைந்து, இன்று (வியாழக்கிழமை) ஒரு பவுன் ரூ.54,600-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, அக்.4-ம் தேதி பவுன் ரூ.42,280 என்றளவில் விற்பனையானது.
இதன் பின்னர் இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்த தங்கம் விலை, தொடர்ச்சியாக உயர்ந்து கடந்த டிச.4-ம் தேதி பவுன் ரூ.47,800 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது.
பின்னர் கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. இதைத் தொடர்ந்து ஜூலை 17-ம் தேதி ரூ.55,360 என்னும் புதிய உச்சத்தையும் அடைந்தது. இந்நிலையில், அம்மாதம் 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் அன்றைய தினம் காலை பவுன் ரூ.54,480 என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், பிற்பகலில் விறுவிறுவென குறைந்து ரூ.52,400-க்கு விற்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாகவே காணப்படுகிறது. அதன்படி, இன்று (செப்.19) பவுன் தங்கம் ரூ.200 குறைந்து, ரூ.54,600-க்கும், கிராமுக்கு ரூ.25 குறைந்து, ரூ.6,825-க்கும் விற்பனையாகிறது. 24 காரட் சுத்தத் தங்கம் பவுன் ரூ.58,240-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை மாற்றமின்றி கிராம் ரூ.96-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.96 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT